வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

மறைந்த இயக்குனர் சித்திக் சூப்பர் ஹிட் அடித்த ஆறு படங்கள்.. 400 நாட்கள் ஓடிய கனகாவின் மறக்க முடியாத படம்

Director Siddique: மலையாள இயக்குனரான பாசில் இடம் துணை இயக்குனராய் பணிபுரிந்தவர் சித்திக். ஆரம்ப காலத்தில் தன் நண்பரான லாலுடன் இணைந்து பணியாற்றினார். அதன் பின் இவர் இயக்கத்தை மேற்கொண்டு, எண்ணற்ற படங்களில் வெற்றியைக் கண்டிருக்கிறார். அவ்வாறு மறைந்த இயக்குனரான சித்திக் சூப்பர் ஹிட் அடித்து 6 படங்களை பற்றி இங்கு காண்போம்.

தான் மேற்கொள்ளும் படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் இயக்கிய படங்களில், 1991ல் வெளிவந்த காட்பாதர் படத்தில் கனகா, ஜெகதீஷ், திலகன், முகேஷ், மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். காதலால் இரு குடும்பத்தினர் இடையே மேற்கொள்ளும் கதையம்சம் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

Also Read: நஸ்ரியாவை கைப்பிடிப்பதற்கு முன் பகத் பாசிலுக்கு ஏற்பட்ட அவமானம்.. 7 வருடம் கழித்து திருப்பிக் கொடுத்த ரத்னவேல்

மேலும் படம் சுமார் 400 நாட்கள் மேல் திரையில் ஓடி வெற்றியை கண்டது. அதை தொடர்ந்து 1992ல் வியட்நாம் காலனி படத்தில் மோகன்லால், கனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற காமெடி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

அதைத்தொடர்ந்து 1996ல் சித்திக் மேற்கொண்ட ஹிட்லர் படத்தில் மம்முட்டி, ஷோபனா, முகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். மாதவன் குட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டியின் நடிப்பு மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இப்படமும் சுமார் 300 நாட்கள் திரையில் ஓடி வெற்றியை கண்டது.

Also Read: 72 வயதிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் முத்துவேல் பாண்டியனின் 5 சாதனைகள்.. ரிலீஸ்க்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துரும் போல

அதைத்தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் பிரண்ட்ஸ். நட்பை போற்றும் விதமாய் இப்படம் தமிழிலும் வெளிவந்து மாபெரும் வெற்றியை கண்டது. 2003ல் ரொமான்டிக் காமெடியாய் வெளிவந்த படம் தான் கிரானிக் பேச்சுலர் இப்படத்தில் பாவனா, ரம்பா, மம்முட்டி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள்.

அண்ணன் தங்கை பாசம் நிறைந்த படமாய் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று கமர்சியல் ஹிட் கொடுத்தது. மேலும் 2011ல் சித்திக் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த படம் தான் பாடிகாட். சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 252 கோடியை பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது.

Also Read: தளபதி 68 கதையை விட மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருக்கு.. கங்கை அமரன் கூறிய ட்விஸ்ட் இது தான்!

- Advertisement -spot_img

Trending News