Nethran: பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டார்.
90களின் தொடக்கத்தில் தன்னுடைய சீரியல் வாழ்க்கையை ஆரம்பித்த நேத்ரன் தனக்கு கேன்சர் வியாதி உறுதியாகும் வரைக்குமே நடித்துக் கொண்டுதான் இருந்தார்.
நடிப்பு என்பதை தாண்டி நேத்ரன் நன்றாக நடனம் ஆட கூடியவர். உடலையும் ரொம்பவும் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார்.
தொடர்ந்து ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது இவருக்கு கேன்சர் இருந்தது உறுதியானது.
அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் ஆறு மாத காலத்திற்குள் இவருடைய வாழ்க்கை முடிந்து விட்டது.
மகள் அஞ்சனாவின் உருக்கமான பதிவு
நேத்ரன் மட்டுமில்லாமல் அவருடைய மனைவி தீபா மகள்கள் அபிநயா மற்றும் அஞ்சனா என மூவருமே மீடியாவில் பிசியாக இருக்கிறார்கள்.
சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷின் அம்மாவாக தீபா நடித்துக் கொண்டிருக்கிறார்.
அபிநயா கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஞ்சனா டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நேத்ரனின் மறைவு இந்த குடும்பத்திற்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் அவருடைய மகள் அஞ்சனா அப்பா குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது, ஆனால் எங்களுக்கு, APPA, நீங்கள் எப்போதும் எங்கள் மிகப் பெரிய மற்றும் ஒரே பிடித்த ஹீரோவாக இருந்தீர்கள்.
உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல!! நாங்கள் அதை நிறைவேற்றுவோம் என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் அவருடைய அக்கா அபிநயா தயவு செய்து என் அப்பா பற்றி எந்த தவறான செய்திகளையும் மீடியா மற்றும் யூடியூபர்கள் பரப்பாதீர்கள் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.