திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எளிமையின் மொத்த உருவமாய் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. இமயமலையிலிருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோ

Actor Rajini: ஜெயிலர் படம் ஷூட்டிங் முடிந்த கையோடு லால் சலாம் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் உடனே மாலத்தீவு பக்கம் சென்றார். அங்கு சில நாட்கள் ரிலாக்ஸ் செய்த தலைவர் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்தார். புது எனர்ஜியோடு விழா மேடையில் அவர் பேசிய பேச்சு எந்த அளவுக்கு இருந்தது என அனைவருக்கும் தெரியும்.

அதுவே ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. இப்படி சூப்பர் ஸ்டார் என்ற பெயரே தாரக மந்திரமாக ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் ஜெயிலர் படமும் நேற்று உலகமெங்கும் ஆரவாரமாக வெளியானது. முதல் காட்சியை பார்த்ததுமே ரசிகர்கள் தலைவரின் அலப்பறை வேற லெவலில் இருப்பதாக கூறி வந்தனர்.

Also read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை.. ஜெயிலரில் வாய்ப்பு வாங்கிய மாவீரன் பட நடிகர்

அதை அடுத்து வந்த தொடர் விமர்சனங்களும் சூப்பர் ஸ்டாருக்கு சாதகமாகவே இருந்தது. படத்தில் அங்கங்கு சில விஷயங்கள் அதிருப்தியை கொடுத்திருந்தாலும் மொத்தத்தில் தலைவரை இப்படி ரகளையாக பார்த்ததில் ரசிகர்களுக்கு பரம சந்தோஷம் தான். மேலும் பெரிய பெரிய டாப் ஹீரோக்களும் படத்தைக் காண தியேட்டரில் குவிந்தது தான் ஆச்சரியம்.

அந்த வகையில் ராகவா லாரன்ஸ், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், மீனா என பல்வேறு நட்சத்திரங்கள் நேற்று ஜெயிலர் படத்தை தியேட்டர்களில் கண்டு ரசித்தனர். இப்படி தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Also read: சூப்பர் ஸ்டார் பெயரை காப்பாற்றிய 7 இயக்குனர்கள்.. இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த நெல்சன்

ஆனால் இந்த அலப்பறைகளுக்கெல்லாம் காரணமான ரஜினி இப்போது ஆன்மீக வழியில் அமைதியை தேடிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளே சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு கிளம்பிவிட்டார். நான்கு வருடங்களுக்குப் பிறகு அங்கு செல்லும் ரஜினி இப்போது ரொம்பவும் புத்துணர்ச்சியோடு இருக்கிறாராம்.

எளிமையாக இருக்கும் சூப்பர் ஸ்டார்

rajini-himalaya
rajini-himalaya

அங்கு எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். அதில் மிகவும் எளிமையாக இருக்கும் சூப்பர் ஸ்டார் பக்தி மயமாக காணப்படுகிறார். இந்த போட்டோ தான் இப்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

பக்திமயமாக காணப்படும் சூப்பர் ஸ்டார்

rajini-himalayas
rajini-himalayas

Trending News