செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Ilaiyaraja: இந்த ஊரே பத்திக்கிட்டு எரியுது.. மகனுடன் வைரலாகும் இளையராஜாவின் புகைப்படம்

Ilaiyaraja: இளையராஜாவின் சர்ச்சை தான் மீடியாவில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாடல்களின் காப்புரிமை பஞ்சாயத்தில் இவருடைய பெயர் டேமேஜ் ஆகி இருந்தது.

அதில் சன் நிறுவனத்திற்கு இவர் விட்ட நோட்டீஸ் பேரதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதை தொடர்ந்து இளையராஜா இப்படி செய்வது நியாயமா? என பட்டிமன்றமே நடந்து வருகிறது.

இதற்கு காப்புரிமை சட்டம் பற்றி பலரும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் இளையராஜாவின் வழக்கறிஞர் கூட அவர் தரப்பு நியாயங்களை முன்வைத்து வருகிறார்.

அப்பாவுடன் யுவன் சங்கர் ராஜா

yuvan-ilayaraja
yuvan-ilayaraja

ஆனாலும் இசைஞானி தலைகனம் பிடித்தவர் கர்வம் அதிகம் என்றால் கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளையராஜா தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பாசத்துடன் உணவு ஊட்டுகிறார். தற்போது மொரிசியஷில் இருக்கும் அப்பாவை பார்க்க யுவன் அங்கு சென்று இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. இதை பார்த்த ரசிகர்கள் இங்க ஊரே பத்திக்கிட்டு எரியுது. ஆனா ராஜா சார் இவ்வளவு கூலா இருக்கிறாரே என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

Trending News