சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மீண்டும் தேரை இழுத்து தெருவில் விட்ட லதா ரஜினிகாந்த்.. 13 மாதங்களாக சம்பளம் போடாததால் போராட்டம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவைத் தாண்டி அரசியல் வாழ்க்கையிலும் களமிறங்க முடிவு செய்தார். அதற்கு காரணம் இவரது ரசிகர்கள் மட்டுமே. அந்த அளவிற்கு தமிழகத்தில் ரஜினிகாந்திற்கு செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்திவரும் பள்ளியின் ஆசிரியர்கள் லதா ரஜினிகாந்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். லதா ரஜினிகாந்த் ஆஷ்ரம் என்ற பெயரில் சென்னை கிண்டியில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் 500க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில் 69 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 13 மாதங்களாக பள்ளியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என கூறி ஊழியர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சற்று பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, “இப்பள்ளியில், கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் எனது பணிக்காலம் முடிந்துவிட்டதாக கூறி என்னை பணியில் இருந்து விலகுமாறு பள்ளியின் மேலாளர் கூறினார். எனவே நானும் எனக்கு சேரவேண்டிய ஊக்கத்தொகை, மற்றும் சம்பள பாக்கியை தருமாறு கோரினேன்.

இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உதவியாளரை அணுகியபோது நீங்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என்று கூறினார். எனவே நாங்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கினோம். நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வந்தபோதும் கடந்த 13மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 4ஆண்டுகளாக ஊக்க தொகையும் போடவில்லை” என கூறியுள்ளார்.

atha-rajinikanth-school
atha-rajinikanth-school

கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் கஷ்டத்தில் இருக்கும்போது கூட அவர்கள் ஊதியம் வழங்கவில்லை என புகார் கூறியுள்ளனர். சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி மீது இதுபோன்ற புகார் எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் செய்த பணிக்கு நியாயமான ஊதியத்தை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

Trending News