திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

என் ட்ரஸ்டுக்கு பணம் அனுப்பாதீங்க.. ஒரே போடாய் போட்ட ராகவா லாரன்ஸ்

 Lawrence: எம்ஜிஆர், விஜயகாந்த் போன்ற பிரபலங்கள் தன்னைத் தேடி உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யக் கூடியவர்கள். ஆனால் யார் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்து கேட்காமலே அவர்களுக்கு உதவி செய்து வருகிறார் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ். இப்போது நடிகராக பல படங்களில் லாரன்ஸ் கமிட்டாகி இருக்கிறார்.

இந்நிலையில் லாரன்ஸ் நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் நிறைய உதவிகள் செய்து வரும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய டிரஸ்டுக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பதையும் ஒரு வீடியோ மூலம் கூறி இருக்கிறார்.

Also Read : சந்திரமுகி 2வில் லாரன்ஸ் வாங்கிய சம்பளம்.. அசால்டா வியாபாரம் பண்ணி கெத்து காட்டிய லைக்கா

அதாவது லாரன்ஸ் நடன இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது 60 குழந்தைகளை தத்தெடுத்து வீட்டில் வளர்த்து வந்தாராம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அப்போது நடன இயக்குனராக மட்டும் இருந்ததால் அந்த வருமானத்தின் மூலம் பெரிய அளவில் உதவி செய்ய இயலவில்லையாம்.

அதோடு மட்டுமல்லாமல் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் கடவுளின் அருளால் இப்போது வருடத்திற்கு மூன்று படங்கள் கிடைக்கிறது. இந்த வருமானத்தின் மூலம் என்னுடைய டிரஸ்டில் உள்ள குழந்தைகளின் முழு செலவையும் தன்னால் பார்த்துக் கொள்ள இயலுகிறது.

Also Read : ரஜினியை அவர் இஷ்டம் போல் வாழ விடுங்க.. சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்கும் ஆதரவு, பதிலடி கொடுத்த லாரன்ஸ்

அதனால் என்னுடைய டிரஸ்டுக்கு மற்றவர்கள் யாரும் பணம் அனுப்ப வேண்டாம். உங்களது வீட்டில் அருகிலேயே உதவி இல்லாமல் பலர் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மேலும் என் மூலமாகத் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நான் சிலரை கைகாட்டி விடுகிறேன்.

நேரடியாகவே நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம் என அந்த பதிவில் லாரன்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். கோடி கோடியாய் சம்பாதித்தும் கொடுக்க மனமில்லாமல் இங்கு பலர் இருக்கும் நிலையில் தன்னுடைய வருமானத்தின் மூலமாகவே டிரஸ்ட்க்கு அனைத்தையும் லாரன்ஸ் செய்ய நினைப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

Also Read : சந்திரமுகி 2 வசூல் வேட்டைக்கு லைக்காவின் ராஜதந்திரம்.. பக்காவாய் காய் நகர்த்தும் லாரன்ஸ் அண்ட் கோ

Trending News