ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி இவர்கள் மூவரும் எப்போதுமே பிசியாக இருக்கும் ஆர்டிஸ்ட்டுகள். கேமியோ ரோல், வில்லன், ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையை கிளப்பி விடுவார்கள் அதனால் இவர்கள் எப்போதுமே தேவைப்படக்கூடிய நடிகர்களாக வலம் வருகிறார்கள்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ராகவா லாரன்ஸ் மட்டும் தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார். இப்பொழுது அவரது சிக்னேச்சர் மற்றும் ஜாக்பாட் படமான காஞ்சனா நான்காம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். இதன் சூட்டிங் நேற்று பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது ஆனால் ராகவா லாரன்ஸ் இதற்கு பட்ஜெட்டாக 135 கோடிகள் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது 65 ,70 கோடிக்குள் இந்த படத்தை முடித்து தாருங்கள் என சன் பிக்சர்ஸ் ஆஃபர் கொடுத்துள்ளது. ஆனால் இதற்குள் முடியாது என லாரன்ஸ் மறுத்துவிட்டார்.
காஞ்சனா படத்தின் சாட்டிலைட் வியாபாரம் ஏகபோகமாக இருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பினால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் . எல்லா சேனல்களிலுமே இந்த படத்தால் டிஆர்பி கிங்காக வளம் வருபவர் ராகவா லாரன்ஸ், ஆனால் அதை கூட பொறுப்பேடுத்தாமல் சன் டிவி பட்ஜெட்டை குறைத்து இந்த படத்தை இழந்து விட்டது.
இப்பொழுது இந்த ப்ராஜெக்ட் கோல்டு மைன் மணிஸ் இடம் சென்றுவிட்டது. அவர்தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர். ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நான்கு வருடங்களுக்கு முன் துர்கா என்ற படத்தை இயக்கி நடிப்பதற்கு அவர்களிடம் 10 கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இப்பொழுது அது வட்டி என மொத்தமாக 20 கோடிகள் ஆயிற்று.
மேற்கொண்டு தயாரிப்பாளர் கோல்டு மைன் மணிஸ் 70 கோடி ரூபாய் அவரிடம் கொடுத்து காஞ்சனா 4ஆம் பாடத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார். இப்பொழுது வாங்கிய இருபது கோடி, கொடுத்த 70 கோடி என மொத்தம் 90 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகிறது காஞ்சனாவின் அடுத்த பாகம்.