வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அந்தப் படத்தோட LCU சேப்டர் முடியும்.. அப்புறம் என்ன திட்டம்? லோகேஷ் கனகராஜ் பதில்

வேற லெவல் இயக்குனராக இருக்கிற லோகேஷ் கனகராஜை இன்னும் ரெண்டு வருசத்துக்கு கையில் புடிக்க முடியாதுங்கற மாதிரி ரொம்ப பிஸியான டிரைக்டராக கேரியரின் பீக்கில இருக்காரு. அவருக்கு இருக்கிற பேன் பேஸும், அவர் தன் குட் புக்கில வைச்சிருக்கிற டாப் நடிகர்கள் கோலிவுட்டுல மட்டுமில்ல, பாலிவுட்டுலயும், டோலிவுட்டிலயும் கூட இருக்காங்க.

ஏன்னா, லோகேஷோட படங்கள்லாம் யாரும் நெனச்சு பார்க்க முடியாத அளவுக்கு மாஸ் ஆடியன்ஸ் விரும்ப வைக்குது. அப்புறம் இன்னைக்கு இருக்க இளைஞர்களுக்கும் அவரோட படங்கள் தீனியா இருக்குது. அதுனால தியேட்டரில அவரோட படம் எப்போது ரிலீஸாகும்னு எதிர்பார்த்திட்டு இருக்காங்க.

ஏற்கனவே கைதி, மாஸ்டர், விக்ரம், லியோன்னு டாப் ஸ்டார்களோட கூட்டணி வைச்சவரு, இப்போ சூப்பர் ஸ்டாரு ரஜினி, ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடிப்புல உருவாகி வரும் கூலி படத்தை இயக்கிட்டு இருக்காரு. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சன்பிக்சர்ஸ் தயாரிக்குது.

இந்தப் படம் இந்திய சினிமாவுல அதிக வசூல் குவிக்கற படமா இருக்கனும்னு ரொம்ப யோசித்து, இப்படத்தை எடுத்துட்டு வர்றதா சொல்றாங்க. சினிமாவுல ஒரு சூப்பர் வசூல், சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு அப்படியே சினிமாவுல இருந்து ரெஸ்ட் எடுக்கனுன்னு ரஜினி விரும்புறதா பலரும் சொல்லறாங்க.

LCU – Lokesh Cinematic Universe எப்போது முடியும்?

அதுனாலயே ரஜினிக்காக மெனக்கெட்டு லோகேஷ் கூலி படத்தில கவனம் செலுத்திட்டு இருக்காரு. பொதுவா லோகேஷ் படம்னாலே LCU – Lokesh Cinematic Universe னுதான் ரசிகர்கள் சொல்வாங்க. அதுனால கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படத்துலயும் எல்.சி.யு இருந்துச்சு, கூலி படத்துலயும் அது வரும்னு சொல்றாங்க.

அதேபோல், கூலி படத்துக்கு அப்புறம் கைதி 2 படத்தையும், அதன் பிறகு விக்ரம் படத்தில் சூர்யா வந்த ரோலக்ஸ் கேரக்டரில் முழு படத்தையும் அவர் இயக்கப் போறாரு. அதுக்கு அப்புறமா விக்ரம் 2 படம். இந்த விக்ரம் 2 படத்தோட LCU கான்செப்ட் முடியும்னு நினைக்கிறதா லோகேஷ் தெரிவிச்சிருக்காரு.

வழக்கமா லோகேஷ் படம்னாலே அதில் அடிதடி, போதை, மது, சூதாட்டம், வன்முறை இதெல்லாம்தான் இருக்குதுன்னு சமூக ஆர்வலர்களும் சொல்லறாங்க. இது இளந்தலைமுறைக்கு நல்லதில்லைன்னும் சொல்றாங்க. இதுக்காக லோகேஷ் மேல ஒரு கேஸ் கூட போட்டாங்க.

எல்.சி.யுக்கு அப்புறம் என்ன கதை?

ஆனால், இது படங்கிறதாலதான் இப்படி எடுக்கிறாரு மத்தடி ஒன்னுமில்லைனும் சினிமாக்காரங்க சொல்றாங்க. இருந்தாலும் எல்.சி.யுவ தாண்டி லோகேஷ் என்ன கதை வைச்சிருக்காருங்கறது ஒரு கேள்வியா ரசிகர்கள் அவர் முன் வைக்கிறதையும் அவர் காது கொடுத்து கேட்பாருன்னு கூறப்படுது. அதுனால நிச்சயம் ஒரு ரொமாண்டிக் காதல் படம் பண்ணுனாலும் ஆச்சரியமில்லை.

Trending News