விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் தற்போது வரை இந்த நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவர்தான் ஷிவானி நாராயணன். இவர் பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு, ஷிவானி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் 2 மில்லியன் ஃபேன்ஸ்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார்.
மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்தே ஷிவானி, பாலாஜியுடன் நெருக்கமாக பழகுவதோடு, பாலாஜிக்கு ஊட்டி விடுவது, மசாஜ் செய்வது, கை கால்களை அமுக்கி விடுவது என பாலாஜிக்கு முழுநேர ஆயா வேலை பார்த்து வருகிறார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி தனது இறுதி கட்டத்தை நெருங்கி வருவது தெரிந்தும் கூட இன்று வரை சொல்லிக்கொள்ளும் வகையில் ஏதும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஷிவானி.
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஷிவானியின் தாயார் அகிலா, ஷிவானியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். மேலும் அகிலாவிற்கு சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஷிவானியின் அம்மாவின் இந்த செயலுக்கு, பாடகியான சின்மயி கடும் எதிர்ப்பை தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் தெரிவித்துள்ளார்.
அதாவது சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் தாய் அவரை அசிங்கப்படுத்தியதைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். இது ரொம்ப தப்பா எனக்கு தெரியுது. உங்க பொண்ணோட கேரக்டர அசிங்கப்படுத்துனதுக்கு பதிலா ஒரு பொறுப்பான அம்மாவா பேசியிருக்கலாம்’ என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் சினிமாவில் இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்பட்டமாக ஒரு சில சில்மிஷ வேலைகள் வெளியே தெரிய வந்ததால் மட்டுமே சிவானியை அவரது அம்மா திட்டினார்கள். நீங்க ரொம்ப யோக்கியமா என்று ரசிகர்கள் சின்மயி வெளுத்து வாங்கி வருகின்றனர்.