வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

மீண்டும் ஒரு மிரட்டலான பிதாமகனாக ஆர்கே சுரேஷ்.. சூர்யா வெளியிட்ட விசித்திரன் டீசர்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் பாலா. இவர் தமிழ் சினிமாவில் ஜாம்பவானான பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் பாலா, ‘சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக கால்பதித்தார். அதேபோல் பாலா இயக்குனராக மட்டுமல்லாமல், தனது பி  ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில்,பாலா தற்போது மலையாளப் படமான ‘ஜோசப்’ என்ற திரைப்படத்தின், தமிழ் ரீமேக்கான ‘விசித்திரன்’ என்ற படத்தை தயாரித்துள்ளாராம்.

மேலும் பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். அதோடு, இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளதோடு, வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இந்தப் படத்திற்காக புரமோஷனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ‘விசித்திரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் புத்தாண்டு தினமான நேற்று, விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே, சூர்யா இயக்குனர் பாலா படத்திற்கு செய்துள்ள இந்த உதவி, தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் விசித்திரன் படத்தின் டீசர் வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

Trending News