வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

தளபதி65 படத்தில் இணையும் முன்னணி காமெடி நடிகர்கள்.. இணையத்தில் டிரெண்டாகும் வெறித்தனமான அப்டேட்

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படமானது திரையரங்கில் தாறுமாறான வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ள செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான்.

மேலும் தளபதி 65 படத்தின் நாயகி பற்றி பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் ரஷ்மிக்கா மந்தான்னா என்கின்றனர். மறுபுறம் பூஜா அகர்வால், நிதி அகர்வால் என சொல்லப்படுகிறது. ஆனால் வில்லன் யார் என்றால் நடிகர் அருண் விஜய் தான், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவைக்க படக்குழு, அருண் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது படத்தில் முன்னணி காமெடி நடிகர்ககளான கணேஷ் ஜனார்தணன் மற்றும் யோகிபாபு ஆகியோர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வித்தியாசமான நகர்ப்புற கதாபாத்திரத்தில் இவர்கள் இருவரும் நடிக்கவிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப் போவதாக படத்தின் இயக்குனர் நெல்சன் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளாராம். அதேபோல் இந்தப் படத்தில் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ள கார் சேசிங் சண்டைக்காட்சியை துபாயில் எடுக்க உள்ளனர்.

thalapathy-65-cinemapettai

அதேபோல் படத்தின் சில காட்சிகள் சென்னை மற்றும் மும்பை நகரங்களிலும் படமாக்கப்பட உள்ளதாம். ஆகையால் இதுபோன்ற தளபதி 65 படத்தை பற்றிய சுவாரசியமான அப்டேட்கள் சோசியல் மீடியாக்களில் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

yogibabu
yogibabu

Trending News