வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெளியில் கசிந்த லோகேஷ் ரஜினி பட அப்டேட்.. தலைவர் கொடுத்த செம ஐடியா

Actor Rajini: தன் திறமைக்கு ஏற்ற பலனாய் தொடர் வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். தற்பொழுது மேற்கொள்ளும் லியோ படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இவர் ரஜினி கூட்டணியில் இணைந்து உருவாகும் பிரம்மாண்ட படைப்பின் அப்டேட் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில், தன் அடுத்த படம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இதனின் பேச்சுவார்த்தை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்பொழுது இப்படம் குறித்த அப்டேட் மேலும் சஸ்பென்சை உருவாக்கி வருகிறது.

Also Read: கன்னட நடிகரை கொக்கி போட்டு இழுக்கும் லோகேஷ்.. கமுக்கமாக கட்டளை போட்ட ரஜினி

கமலின் படைப்பில் மாபெரும் வெற்றியை பெற்று தந்த படம் தான் விக்ரம். அப்படத்தின் பிரம்மாண்டத்தை கண்டு தானும் இதுபோல் ஒரு படம் நடித்து சினிமாவிற்கு இடைவெளி விடலாம் என்ற எண்ணத்தில் ரஜினி முடிவு எடுத்து வருகிறார். அதைக் கொண்டு இப்படத்தின் பேச்சுவார்த்தை மிகவும் ரகசியமாக நடைபெற்று வருகிறது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் பான் இந்தியா லெவலுக்கு பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினி சில ஐடியாக்களை கொடுத்துள்ளார் என்பது பெரிதும் எதிர்பார்ப்புகளை முன்வைத்து வருகிறது.

Also Read: பாபாவுக்கு பின் ரஜினி செய்யாத விஷயம்.. சூப்பர் ஸ்டார் பெயரைக் கெடுத்த விஜய்

இப்படத்தில் நிறைய ஆக்டர்களை கொண்டு வரலாம் என்ற ஒரு ஐடியா தலைவருக்கு இருக்கிறதாம். அதைத்தொடர்ந்து மிகுந்த ரசிகர்களை கொண்ட கன்னட ஹீரோவான கே ஜி எஃப் யாஷை நடிக்க வைக்க வேண்டும் என ரஜினி, லோகேஷிடம் பரிந்துரைத்துள்ளாராம்.

இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே யாஷ் ரஜினியின் ரசிகராம். இந்நிலையில் இது போன்ற வாய்ப்பை வேண்டாம் என்றா சொல்வார். ஆகையால் இவரின் பங்கும் இப்படத்தில் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து வருகிறது.

Also Read: முதல் படத்திலேயே படுதோல்வியை சந்தித்த டாப் 5 நடிகர்கள்.. பயங்கர ப்ளாப்பான தளபதியின் நாளைய தீர்ப்பு

Trending News