நடிகை சமந்தா தனிக்கதாநாயகியாக நடித்த ‘யசோதா’ திரைப்படம் கடந்த மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. டாப் ஹீரோக்களுக்கு இருக்கும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது. மேலும் இந்த படம் கோடிக்கணக்கில் வசூலை அள்ளியது. இந்த படத்தை ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர். வரலட்சுமி சரத்குமார் மற்றும் உன்னி முகுந்தன் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் மாஃபியாவை பற்றி இந்த படம் கூறியிருந்தது. இதனால் பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டன. இந்த படம் தியேட்டர் ரிலீஸில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
Also Read: முன்னேற்றம் அடையாத உடல்நிலை.. சமந்தா செய்த தவறால் மீண்டும் அப்பல்லோவில் அட்மிட்
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு கருத்தரித்தல் மைய்ய மருத்துவமனை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக தடை விதிக்குமாறு மனு அளித்திருக்கிறது. இந்த மனுவில் ‘யசோதா’ திரைப்படத்தில் தங்களுடைய மருத்துவமனையின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் இந்த படத்தினால் தங்கள் மருத்துவமனையின் மீதான நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் எனவும் சொல்லியிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார். வழக்கு விசாரணை முடியும் வரை நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டிருக்கிறார்.
Also Read: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! சிகிச்சையின் போதே ஜிம் வொர்க் அவுட் போட்டோஷூட் வெளியிட்ட சமந்தா
இந்த உத்தரவினால் ‘யசோதா’ திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆவதில் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. நடிகை சமந்தாவிற்கு இது போறாத காலம் என்றே சொல்லலாம். நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகாரத்திற்கு பிறகு சமந்தாவின் சினிமா எதிர்காலம் சறுக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் முன்பை விட கடினமாக உழைத்து அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.
‘யசோதா’ திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சமந்தா, தனக்கு மையோசைடிஸ் என்னும் தோல் அழற்சி நோய் வந்திருப்பதாகவும், தீவிர சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு வந்திருக்கும் நோயை பற்றி கண்ணீருடன் பேசியிருந்தார். இந்நிலையில் இவருக்கு மேலும் இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்கிறது.
Also Read: ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் பிசினஸான யசோதா.. மருத்துவமனையில் இருந்தே வாயடைக்க வைத்த சமந்தா