சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சம்பந்தமே இல்லாமல் ட்ரெண்டான லெஜன்ட் அண்ணாச்சி.. தப்பித்தோம் பிழைத்தோம் என நடையை கட்டிய மன்சூர்

Legend Annachi: சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த சூழலில் பிரபலங்கள் எதை செய்தாலும் அது ட்ரெண்டாகி விடுகிறது. அதிலும் டாப் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் இங்கு அதிகமாக இருக்கும். அதே சமயம் சம்பந்தமே இல்லாமல் சிலர் பப்ளிசிட்டி அடைந்த கதையும் உண்டு.

அப்படித்தான் நேற்று முழுவதும் ட்விட்டர் தளத்தை மன்சூர் அலிகான் ஆக்கிரமித்து இருந்தார். திரிஷாவை பற்றி முகம் சுளிக்கும் வகையில் இவர் கருத்து கூறியது இந்திய அளவில் பிரளயமாக வெடித்தது. அதை அடுத்து லோகேஷ், சின்மயி, சாந்தனு, மாளவிகா மோகனன் என பலரும் ஒன்று திரண்டு திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மன்சூர் இந்த விஷயத்தை சாமர்த்தியமாக கையாண்டு போய் வேலையை பாருங்க என அவர் வேலையை பார்க்க சென்று விட்டார். இருந்தாலும் அவரை விமர்சித்து பல கமெண்ட்டுகள் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: லோகேஷ், விஜய்யை எரிச்சல் அடைய செய்த மன்சூர் அலிகான்.. இருக்கிறதையும் இழந்த வீரபத்ரன்

இப்படி சம்பந்தமே இல்லாமல் ட்ரெண்டான மன்சூர் அலிகானை லெஜென்ட் அண்ணாச்சி ஓரம் கட்டி விட்டார். நேற்று அவர் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய பேச்சு இப்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர் சினிமா துறை இப்போது மக்களை அதிக அளவில் என்டர்டெயின் செய்து வருகிறது.

இதில் காக்கா கழுகு கதை, அவருக்கு பட்டம் இவருக்கு பட்டம் என்பதெல்லாம் பிரயோஜனம் இல்லாதது என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. வணிகர் சங்க விழாவுக்கு சென்ற அண்ணாச்சி எதற்காக விஜய் ரஜினியை சீண்டும் வகையில் பேச வேண்டும். இதை நிச்சயம் அவர் தெரிந்தே தான் செய்திருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து அந்த வீடியோவும் மிகப்பெரிய அளவில் வைரலாகி அண்ணாச்சியை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தது. இதனால் மன்சூர் அலிகான் சர்ச்சை சத்தம் இல்லாமல் அமுங்கி போய்விட்டது. அந்த வகையில் அண்ணாச்சி தெரிந்தோ தெரியாமலோ திரிஷா விவகாரத்தை ஓரம் கட்டி இருக்கிறார்.

Also read: இந்த 5 சம்பவம் நடக்கும் போது கோமாவுல இருந்தீங்களா திரிஷா.? மன்சூர் சர்ச்சையின் அதிர வைக்கும் பின்னணி

Trending News