திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முத்தின பிறகு கடைதெருவுக்கு வந்த கத்திரிக்கா.. ஒரு வழியாக நினைத்ததை முடித்த லெஜன்ட் அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சமீபத்தில் காஷ்மீரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார். லியோ படத்தின் படப்பிடிப்பும் காஷ்மீரில் நடந்து வருவதால் அண்ணாச்சி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியானது.

ஆனால் அண்ணாச்சி தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் விளம்பரங்களில் நடித்து வந்த அண்ணாச்சி தி லெஜன்ட் படத்தின் மூலம் வெள்ளித்திறையில் கால் பதித்தார். எப்படியோ இந்த படம் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

Also Read : டி ஆர் ரூட்டை ஃபாலோ பண்ணும் அண்ணாச்சி.. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை

அதுவே தி லெஜன்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்கியது. ஆனால் படம் வெளியான பிறகு மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதுமட்டுமின்றி புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியிடப்படுகிறது. அப்படிதான் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு, வாரிசு படங்கள் ஓடிடியில் வெளியானது.

இந்த படங்களுக்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போல ஓடிடியில் கிடைத்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான தி லெஜன்ட் படம் ஓடிடியில் விற்பனையாகாமல் இருந்தது. இதனால் அண்ணாச்சி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

Also Read : 2022-ல் பரபரப்பை கிளப்பி மொக்கை வாங்கிய 5 படங்கள்.. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட தி லெஜன்ட்

ஆனால் இப்போது ஒரு வழியாக தி லெஜன்ட் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதாவது படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில் பல போராட்டங்கள் பிறகு தி லெஜன்ட் படத்தை அண்ணாச்சி ஓடிடியில் விற்பனை செய்துள்ளார். இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் கத்திரிக்காய் முத்துன பிறகு கடை தெருவுக்கு வந்தால் என்ன, வரலை என்றால் என்ன என்று கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். ஆனாலும் அண்ணாச்சி தன் நினைத்தபடி ஓடிடியில் படத்தை வெளியிட்டதால் இப்போது ஹாப்பியாக உள்ளாராம்.

Also Read : லியோ படத்தில் இணைந்த லெஜன்ட்.. காஷ்மீரில் இருந்து வெளியான பகிர் வீடியோ

Trending News