புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாங்கதான்யா முதல்ல.. கமல்னு சொன்னதும் ரேஸிலிருந்து விட்டுக்கொடுத்த லெஜெண்ட் அண்ணாச்சி

பெரும்பாலும் நகை மற்றும் துணிக்கடை விளம்பரத்தில் அந்த காலகட்டத்தில் எந்த நடிகையின் மார்க்கெட் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுத்து அந்த விளம்பரத்தில் நடிக்க வைப்பார்கள். ஆனால் தற்போது வரும் விளம்பரங்களில் கடையின் முதலாளிகளே நடித்து வருகின்றனர்.

இந்த ட்ரெண்டை உருவாக்கியவர் நம்ப சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான். இவருடைய நடிப்பு திறனை பார்த்த பலரும் சினிமாவிலும் நடிக்க சொல்லி உள்ளனர். அதே ஆசையில் நம்ப அண்ணாச்சியும் தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக உலக அழகி ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கூட இந்த படத்தில் நடித்துள்ளார். இப்போது இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அதேபோல் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்துவதற்காக பல ஏற்பாடுகள் செய்து வருகிறார் கமல்.

இந்நிலையில் விக்ரம் படத்திற்கு திரைத் துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் வருவதால் வருகிற மே 15ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் கமலுக்கு முன்னதாகவே இதே ஸ்டேடியத்தில் தி லெஜன்ட் படத்திற்கான ஆடியோ லான்ச் நடக்க இருந்துள்ளது.

ஆனால் கமல் கேட்டுக்கொண்டதால் அண்ணாச்சி இந்த இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார். உண்மையிலேயே அண்ணாச்சி பெரிய மனுஷன் தான் என்று என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர். மேலும் தி லெஜன்ட் பாடல்கள் யூடியூபில் வெளியாகி ட்ரெண்ட் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News