லெஜெண்ட் சரவணா நடித்த லெஜெண்ட் படத்தின் தாக்கத்தில் இருந்தே நாம் இன்னும் மீண்டு வராத நிலையில், மக்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் லெஜெண்ட் சரவணா. லெஜெண்ட் படத்தில் இவரது நடிப்பை பார்த்து நெட்டிசன்கள் மெய்சிலிர்த்து போய், அவரை ட்ரோல் மெட்டீரியலாகவே மாற்றி விட்டனர்.
அவரது படம் வெளியாகி 2 வருடங்களாகியும், இன்னும் அவர் நடிக்கும் அடுத்த பட அப்டேட் வரவில்லையே என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் தான், ஒரு சில முக்கிய அப்டேட்களை கொடுத்துள்ளார். அதில் முதல் அப்டேட் என்னவென்றால், நிச்சயமாக லெஜெண்ட் சரவணா தொடர்ந்து படங்கள் நடிக்க போகிறார் என்பது தான்..
இது ரொம்ப புதுசா இருக்குன்னே..
அடுத்த அப்டேட் என்னவென்றால், அந்த படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. தூத்துக்குடியில் முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டது. கடந்த வருடமே இயக்குனர் துரை செந்தில்குமார் இவரை வைத்து ஒரு படம் பண்ணுவதாக அறிவிப்பு எல்லாம் வெளியானது.
இப்படி இருக்க, சில நாட்கள் லெஜெண்ட் சரவணா பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்த நேரத்தில், நிவின் பாலி கெட்டப்பில் வந்து அசத்தினார்.
இதில் இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் கூட வந்துவிட்டார்கள் என்று கூறலாம். அப்படி துரை செந்தில்குமார் இயக்கத்தில் தான் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை தூத்துக்குடியில் முடித்துவிட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளார்கள்.
இதில் முக்கிய ஹயிலைட் என்னவென்றால், இந்த படத்துக்காக கெட்டப் மட்டும் மாற்றவில்லை, மொத்தமாக தன்னையே மாற்றி கொண்டு உள்ளார் சரவணன் அண்ணாச்சி.
துரை செந்தில்குமார் இயக்கம் இந்த புதிய படத்திலிருந்து ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் லெஜெண்ட். தியேட்டரில் சம்பவம் confirm தான் போல..