வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓடவும் முடியல ஒளியவும் முடியல.. லெஜன்ட் அண்ணாச்சி தான் எங்களை காப்பாத்தணும்

Legend Saravanan: மிகப்பெரும் தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான லெஜன்ட் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் கால் தடம் பதித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜன்ட் மூலம் அவர் தன் சினிமா அஸ்திரத்தை ஆழமாக போட்டார்.

அண்ணாச்சி விளம்பர படத்தில் நடித்தாலே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதனாலேயே இப்படமும் ட்ரோல் செய்யப்பட்டது. ஆனாலும் அண்ணாச்சியின் அடுத்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அண்ணாச்சி தன் கடையில் வேலை பார்ப்பவர்களை மட்டுமல்லாமல் பொருள் வாங்க வருபவர்களை கூட ஒரு விஷயத்தில் கொடுமைப்படுத்தி வருகிறாராம். அதாவது சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மக்கள் எப்போது சென்றாலும் தி லெஜன்ட் படத்தின் பாடல்கள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.

Also read: சம்பந்தமே இல்லாமல் ட்ரெண்டான லெஜன்ட் அண்ணாச்சி.. தப்பித்தோம் பிழைத்தோம் என நடையை கட்டிய மன்சூர்

அதிலும் அந்த வாடிவாசல் என்ற பாடல் கடையை விட்டு வெளியில் வந்த பிறகும் மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும். அந்த அளவுக்கு அண்ணாச்சி திரும்பத் திரும்ப பாடல்களை போட்டு அநியாயம் பண்ணிக் கொண்டிருப்பதாக பலரும் கதறி வருகின்றனர்.

ஆனால் மக்களை விட அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலைமை தான் அந்தோ பரிதாபம். ஏனென்றால் கடை திறப்பதில் இருந்து இரவு கடையை மூடும் வரை அவர்கள் அந்த பாடலை தான் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 முறைக்கு மேல் அப்பட பாடல் ரிப்பீட் மோடில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

ஆனால் இந்த அலப்பறையெல்லாம் அண்ணாச்சிக்கு தெரிந்து தான் நடக்கிறதா என தெரியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் இதை நிறுத்தி விடுங்கள் என கஸ்டமர்ஸ் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் அண்ணாச்சியை தான் மலை போல் நம்பி இருக்கின்றனர்.

Also read: தளபதி 68-இல் ஒன்று கூடும் 3 லெஜன்ட்.. வெங்கட் பிரபு செய்ய காத்திருக்கும் தரமான சம்பவம்

Trending News