சரவணா ஸ்டோர்ஸ் புகழ் அண்ணாச்சி சரவணன் அருள் ‘தி லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை குறித்த அப்டேட் விரைவில் வரும் என்றும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சரவணன் அண்ணாச்சி ரோல்ஸ் ராய்ஸ் காரில் கெத்தாக வரும் வீடியோவும், அவரது புதிய படத்திற்கான நியூ லுக் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்.
இதில் அண்ணாச்சி கோட்டு சூட்டில் பளபளன்னு மின்னுகிறார். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திருந்த சரவணன் அண்ணாச்சி, புதிய லுக்கில் மிரட்டலாக மாஸ் காட்டுகிறார். அதே ஸ்டைல் குறையாமல் மணமக்களை மேடைக்கு சென்று வாழ்த்தியுள்ள சரவணன் அண்ணாச்சி, அவர்களுடன் கலர்ஃபுல்லான போட்டோஸ் எடுத்துள்ளார்.
Also Read: ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா
இதில் அண்ணாச்சி பிரன்ச் பியர்ட் ஸ்டைலில் லேசான தாடி, தங்க நிற கோட் சூட், டை கட்டி கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரில் இறங்கிய ஸ்டைலோ ஸ்டைல்தான். அதிலும் காரை விட்டு இறங்கி நடக்கும் அவருடைய துள்ளலான நடை தான் ஹைலைட். தற்போது இருக்கும் சரவணன் அண்ணாச்சியின் நியூ கெட்டப் தி லெஜண்ட் படத்தில் நடித்த கெட்டப்பிற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது.
ஆகையால் அவருடைய புதிய படத்திற்காக தான் தற்போது தயாராகிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரவணன் அண்ணாச்சி மஞ்சள் நிற கோட் சூட், அதற்கு மேட்சிங் ஆன கருப்பு சட்டை கூலஸ் என செம ஸ்டைலிஷ் ஆக போட்டோஷூட் நடத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் ஆனது.
Also Read: அண்ணாச்சி தில்லா குறைத்த 30 வயது.. உல்டா பண்ணிய மாஸ் ஹீரோவின் கெட்டப்பை கண்டுபிடிச்சாச்சு
அதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் நியூ லுக் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவுகிறது. இதைப் பார்த்த இளசுகள் ‘சாரே கொல மாஸ் என கமெண்ட் செய்கின்றனர். சமீபத்தில் காஷ்மீருக்கு சென்ற சரவணன் அண்ணாச்சி, லியோ படத்தில் விஜய் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது குறித்து லியோ படக்குழுவினர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சரவணன் அண்ணாச்சி ஏதோ ஒரு புதிய படத்திற்காகத்தான் தன்னுடைய லுக்கை மாற்றி தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை குறித்த முழு அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரவணன் அண்ணாச்சியின் நியூ கெட்டப்
![legent-saravanan-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/04/legent-saravanan-cinemapettai.jpg)