ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

கடைசி நேரத்தில் கேப்டனாகும் வாய்ப்பை இழந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்..

அண்ணன் எப்பொழுது போவான் திண்ணை எப்பொழுது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கும் வகையில் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த கேப்டன் நான்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது கேப்டனாகக்கூடிய வாய்ப்பு கிடைக்காமல் போன கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர்.

கேப்டனுக்கு உண்டான தகுதிகள் அனைத்தும் இருந்தும் ஒருமுறை கூட தன் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்காமல் போன 4 முக்கிய வீரர்கள்.

கிளென் மெக்ராத்:

கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த அணி என்றால் அது ஆஸ்திரேலிய அணி. 1990களில் கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத ஒரு அணியாக வலம் வந்தது. அந்த அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கிளன் மெக்ராத். 1993 ஆம் ஆண்டு அந்த அணிக்காக அறிமுகமாகிய அவர் 2007ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத ஒரு நட்சத்திர வீரராக விளங்கியவர். ஸ்டீவ் வாகிற்கு பிறகு கேப்டன் பொறுப்பு இவர் கையில் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிக்கி பாண்டிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

Glen-Mcrath-Cinemapettai.jpg
Glen-Mcrath-Cinemapettai.jpg

முத்தையா முரளிதரன்:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் வீழ்த்தி மிகப்பெரிய சாதனையாளராக விளங்கும் இலங்கையைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன். இவருக்கு பின்னால் அணியில் இடம்பிடித்த குமார் சங்ககாரா எல்லாம் கேப்டனாக இருந்த போதிலும் இவர் அணிக்காக ஒரு முறை கூட கேப்டன் பொறுப்பை ஏற்றதில்லை.

Murali-Cinemapettai.jpg
Murali-Cinemapettai.jpg

யுவராஜ் சிங்:

இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங்கின் பெயர் இடம் பெறாமல் போனது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்தான். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியமான பங்கு அளித்தவர் யுவராஜ். 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர் 17 ஆண்டுகள் விளையாடிய போதிலும் ஒரு போட்டியில் கூட இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தியதில்லை.

Yuvaraj1-Cinemapettai.jpg
Yuvaraj1-Cinemapettai.jpg

டேல் ஸ்டென்:

2004ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமான இவர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். ஆனால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆனாலும் இவர் ஒருமுறைகூட கேப்டனாக அணியை வழிநடத்தி சென்றதில்லை.

Dale-Styen-Cinemapettai.jpg
Dale-Styen-Cinemapettai.jpg
- Advertisement -spot_img

Trending News