புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லியோ ஆடியோ லான்ச் இடத்தையும் நேரத்தையும் லாக் செய்த படக்குழு.. மாஸ்டர் மைண்டாக செயல்படும் நபர்

Leo Audio Launch: வரும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் தளபதி விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. லியோவின் ஆடியோ லான்ச் எப்போது என்பதுதான் இப்போது படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களின் கேள்வி.

ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் தான் விஜய்யின் குட்டிக்கதையையும், ஜெயிலர் ஆடியோ லான்சிக்கு பதிலடியையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினி தன்னுடைய ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பருந்து காகம் கதையை சொல்லி விஜய்யை தாக்கிப் பேசியதாக தளபதி ரசிகர்கள் செம காண்டில் இருக்கின்றனர்.

Also Read: ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

இதனால் இப்போது அவர்களுக்கு லியோ பட ஆடியோ லான்ச் தான் முக்கியமாக தெரிகிறது. முதலில் ஆடியோ லான்ச் நிச்சயமாக தமிழ்நாட்டில் கிடையாது என்று உறுதியாக சொல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சி முன்பு தமிழகத்தில் இருக்கும் தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்தூரில் நடக்கும் என சொல்லப்பட்டது அது ஒரு கட்டத்தில் இல்லை என்பது தெளிவானது.

அதன் பின் வெளிநாடுகளில் தான் அதுவும் துபாயில் ஒரு பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் லியோவின் ஆடியோ லான்ச் நடைபெறப் போகிறது என்ற தகவல் வெளியானது. அங்கே தான் நடக்கும் என்று கிட்டத்தட்ட 50 சதவீதம் உறுதியானது. இப்பொழுது அந்த ஸ்டேடியத்தில் பராமரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. அதனால் கடைசியாக மலேசியாவில் பிளான் பண்ணி இருக்கிறார்கள், வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் நடக்கவிருக்கிறது.

Also Read: கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

அக்டோபர் 19ஆம் தேதி லியோ படத்தை ரிலீஸ் செய்ய போகின்றனர், அதற்கு முன்பு ரசிகர்களிடம் படத்தின் பாடலை திட்டமிட்டுள்ளனர். ஆனால் லியோவின் ஆடியோ லான்ச் தமிழகத்தில் நடத்தாமல் வெளிநாடுகளில் நடக்க என்ன காரணம் என்றால், விஜய்க்கு இப்போது உலக அளவில் ரசிகர்கள் பெருகிவிட்டனர் இதனால் இந்த முறை லியோ படத்தின் ஓவர்சீஸ் உரிமையும் தாறுமாறாக விற்கப்பட்டது

ஆகையால் வெளிநாடுகளிலும் லியோ படத்தின் வசூல் தாறுமாறாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் இந்த முறை ஆடியோ லான்சை நடத்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திடம் மாஸ்டர் மைண்ட் உடன் விஜய் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அதனால் தான் தமிழகத்தில் நடத்தாமல் மலேசியாவில் நடத்துகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பது விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியில் பருந்து காக்கா கதைக்கு பதிலடி கிடைத்தால் போதும்.

Also Read: தளபதி 68 கதையை விட மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருக்கு.. கங்கை அமரன் கூறிய ட்விஸ்ட் இது தான்!

Trending News