Leo Movie 12th Day Collection: மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான படம் தான் லியோ. சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா, மடோனா செபஸ்டின், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் ஒன்றிணைந்து லியோ படத்தில் நடித்திருந்தனர். ஆயுத பூஜை தொடர் விடுமுறையை கணக்கில் கொண்டு அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
பொதுவாக முதல் நாளே இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் 148.5 கோடி வசூல் செய்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருந்தது.
ஏனென்றால் பத்தாயிரம் தியேட்டர்களுக்கு அதிகமாக வெளியான ஜவான் படம் கூட 127 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில் வெறும் 4000 தியேட்டரில் வெளியான லியோ படத்தால் எப்படி இவ்வளவு வசூல் செய்ய முடிந்தது என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். ஹீரோ அந்தஸ்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு வசூலை ஏற்றி சொல்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
அதேபோல் நாளுக்கு நாள் லியோ படத்தின் வசூல் பல மடங்கு அதிகரித்ததாக தான் தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் லியோ படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 நாட்கள் முடிவு பெற்ற நிலையில் லலித் இப்போது இப்படம் செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு என்பதை பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி 540 கோடிக்கும் அதிகமாக இதுவரை லியோ வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னதாக நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒட்டுமொத்தமாகவே இவ்வளவுதான் வசூல் செய்திருந்தது.
ஆனால் லியோ படம் கலவையான விமர்சனங்களைபெற்றதால் ஜெயிலர் பட வசூலை தொட கூட முடியவில்லை. இப்போது 540 கோடியை நெருங்கிய நிலையில் விரைவில் ஆயிரம் கோடி வசூல் என்றும் லலித் வெளியிடுவார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் லியோ படத்தின் வசூல் விபரங்களை எந்த அளவுக்கு நம்புவது என்ற சந்தேகம் தான் இப்போது எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கிறது.