செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வியாபாரத்திற்காக புதிய யுத்தியை கையில் எடுத்த லியோ படக்குழு.. பழைய சம்பவத்தை மறந்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இப்பொழுது தமிழில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் தேடப்படும் ஒரு இயக்குனர். ஆரம்பத்தில் இருந்தே சினிமாவை வித்தியாசமாக கையாளும் ஒரு இயக்குனர் லோகேஷ். இவர் எடுத்த முதல் படம் மாநகரம். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள்.

சின்ன ஹீரோவை வைத்து தரமான கதையை கொடுத்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் கைதி என்ற சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் சம்பாதித்த படத்தை கொடுத்தார். ஆனால் அடியோடு அந்த பழைய பார்முலாவை மறந்து விட்டார்.

Also Read: காது குத்திய லோகேஷ்.. ரொம்ப பேசக்கூடாது, படத்தில் வில்லனுக்கு பெரிய ஆப்பு

இப்பொழுது முழுக்க முழுக்க பிசினஸ் என எல்லாத்தையும் பார்க்க ஆரம்பித்து விட்டார். வியாபாரத்திற்காக எல்சியூ என்ற ஒரு புது யுக்தியை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து விட்டார். கைதி, விக்ரம், லியோ இந்த மூன்று படத்தையும் எல்சியூ-வில் கொண்டு வந்து விட்டார் லோகேஷ்.

இப்பொழுது அவர் சினிமாவில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பழைய படமான மாநகரம் போன்ற படங்களை எடுப்பதில்லை. இந்தப் படம் லோகேஷின் மற்ற படங்களான கைதி, மாஸ்டர், விக்ரம் போல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கவில்லை. குறிப்பிட்ட அளவு வசூல் மட்டுமே கிடைத்தது.

Also Read: விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்

அதனால் தான் அவற்றை லோகேஷ் தனது எல்சியூ-வில் சேர்க்கவில்லை. இப்போது இவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் இவர் முன்பு இயக்கிய விக்ரம், கைதி போன்ற படங்களின் கதாபாத்திரங்களும் தொடர்ச்சியாக இடம்பெறப் போகிறது.

ஏற்கனவே விக்ரம் படத்தில் தரமான சம்பவங்களை செய்த லோகேஷ், வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் லியோ படத்தில் பொலந்து கட்டப் போகிறார். இருப்பினும் அவருடைய முதல் படமான மாநகரம் படத்தை மட்டும் பிசினஸ் நோக்கத்தில் மறந்து விட்டது வியாபார யுக்தியாக பார்க்கப்படுகிறது.

Also Read: ஜெயிலர், லியோ கொடுத்த தைரியம்.. சரசரவென தீபாவளிக்கு வரிசை கட்டும் 4 படங்கள்

Trending News