வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோ முதல் பாதி எப்படி இருக்கு? நாலா பக்கமும் இருந்து வெளிவந்த அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Leo First Half Twitter Review:இன்று தியேட்டரே திருவிழா கோலம் போல இருக்கிறது. காரணம் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் லியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இந்த படம் 9 மணிக்கு தான் காட்சி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற இடங்களில் அதிகாலை காட்சி வெளியாகி இருக்கிறது.

leo-review
leo-review

அந்த வகையில் லியோ படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என்பதை ட்விட்டர் வாயிலாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முதல் பாதியை பார்த்ததில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் ஆரம்பக் காட்சி மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.

leo-review
leo-review

லியோ முதல் பாதி அற்புதமாக இருக்கிறது. அதிலும் தளபதி விஜய்யின் நடிப்பு உச்ச நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆக்சன் காட்சிகள் மெய்சிலிர்க்கும் படியாக அமைந்துள்ளது. சர்ப்ரைஸ் பிளாக் மற்றும் இன்டர்வல் பிளாக் ஹைலைட் இரண்டாம் பாதியை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்து இருக்கிறார்.

leo-review1
leo-review1

லியோ படத்தின் முதல் பாதி சிறப்பான இரண்டாம் பாதியில் நன்றாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக லியோ வெற்றி என்பது உறுதி. தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த முதல் பாதியாக லியோ படம் அமைந்திருக்கிறது. இவர்களது கூட்டணி ஒரு பிளாக்பஸ்டர் காம்போ என ரசிகர் வெறித்தனமாக பதிவிட்டிருக்கிறார்.

leo-review2
leo-review2

Trending News