வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லியோவே இன்னும் ரிலீஸ் ஆகல அதுக்குள்ள வெங்கட் பிரபு செய்யும் அலப்பறை.. கெத்து காட்டும் தளபதி

Actor Vijay and Venkat Prabhu: தற்போது எங்கு திரும்பினாலும் விஜய்யின் லியோ படத்தின் பரபரப்பு தான் நாலா பக்கமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதனாலயே லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பதற்கு அனைவரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரபரப்பு அடங்காத நிலையில் அதற்குள் வெங்கட் பிரபுவுடன் விஜய் அவருடைய 68வது படத்தை லாக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து ஒவ்வொரு விஷயங்களும் லீக் ஆகி வதந்திகளாக பரவி வந்தது. அதற்காக வெங்கட் பிரபு தலைமறைவாகவே இருந்து கொண்டு படத்திற்கான வேலைகளை கமுக்கமாக செய்து வருகிறார். ஆனாலும் இவரை விடாமல் பலரும் இவரிடம் எப்படியாவது உதவி இயக்குனராக சேர்ந்து விட வேண்டும் என்று வெங்கட் பிரபுவை கொக்கி போட்டு வருகிறார்கள்.

Also read: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

தற்போது வரை மட்டுமே 1000 விண்ணப்பங்களுக்கு மேல் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு விஷயம் இயக்குனர் சங்கர் மற்றும் மணிரத்தினம் இயக்கிய படங்களுக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரவில்லை. ஆனால் வெங்கட் பிரபுவுக்கு இப்படி நடப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.

ஆனால் வெங்கட் பிரபு இதுவரை எடுத்த படங்களுக்கு கூட இப்படி ஒரு விண்ணப்பங்கள் வந்ததே இல்லை. எப்போது விஜய் படத்தை எடுக்கிறார் என்று அறிவிப்பு வந்ததோ அதிலிருந்தே இவருடைய நிலைமையை வேற லெவல்ல மாறிவிட்டது. அதற்காக வெங்கட் பிரபுவிடம் எப்படியாவது உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றும், படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரும் இவரை தேடிக்கொண்டு போகிறார்கள்.

Also read: செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

அதோடு விடாமல் இவர் கதை எழுதிக் கொண்டிருக்கும் ஹோட்டல் பெயர்களை வலைதளங்கள் மூலம் தெரிந்து கொண்டு, ஹோட்டல் வாசலில் கதியே என்று ஆயிரக்கணக்கானோர் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்த பரபரப்பு எல்லாம் விஜய்யின் ஒருவருக்காக தான் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனாலும் இது ஒரு விதத்தில் இளைஞர்களை தேவையில்லாமல் வீணாக்குவது போல் இருக்கிறது.

இந்த மாதிரி விஷயத்தை ஆரம்பித்திலேயே தடுத்திட வேண்டும் என்று பல பிரபலங்கள் அவர்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். நாளுக்கு நாள் விஜய்யின் கெத்து கூடிக் கொண்டே போவதால் சில தவிர்க்க முடியாத விளைவுகளும் பின் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் ஒரு முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Also read: விஜய்யா, விஜய் சேதுபதியா உண்மையை உளறிய ஜவான் ஸ்டண்ட் மேன்.. அட்லீயின் கோபத்தை சம்பாதித்த பைட்டர்

Trending News