புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எவன் தடுத்தாலும் லியோ 1000 கோடி வசூல் உறுதி.. நண்பா நண்பிசை குஷிபடுத்த எடுத்த கடைசி அஸ்திரம்

Vijay in Leo Movie: லியோ படம் பல பிரச்சினைகளையும், சர்ச்சைகளையும் தாண்டி தற்போது ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கி விட்டது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லரை பார்த்த பிறகு இன்னும் அதிகமாகவே சர்ச்சைகள் வெடித்து வருகிறது. ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்து வருகிறார்கள்.

அதனாலேயே ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டு ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லியோ படத்திற்கு அதிகாலை ஷோ மற்றும் சிறப்பு காட்சிகள் என எதுவும் கிடையாது. அத்துடன் நான்கு காட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இப்படியே போனால் லியோ படத்தின் வசூல் ரொம்பவே அடிபட்டுவிடும். அத்துடன் ரசிகர்களும் இந்த ஒரு விஷயத்தினால் அப்செட் ஆகியிருக்கிறார்கள்.

Also read: லோகேஷிடம் பலிகாடாக மாட்டிய விஜய்.. லியோ படத்தில் ஏமாறப்போகும் 3 விஷயங்கள்

அதனால் லியோ படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக கடைசி அஸ்திவாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அதாவது லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் அதற்கு முன் பிரிமியர் ஷோ போட்டு விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் அக்டோபர் 18ல் பிரிமியர் ஷோவாக மாலை மற்றும் இரவு காட்சிகள் வெளியாவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 1000 திரையரங்குகளில் பிரிமியர் ஷோ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

Also read: கமல், சூர்யா லியோல இருக்காங்களா.? லோகேஷ் கூறிய ட்விஸ்ட்டான பதில்

அதனால் எப்படியும் லியோ படத்திற்கு கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் கிடைத்து விடும் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் எவன் யாரு தடுத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப வசூலில் இதுவரை பெறாத சாதனையை லியோ படம் பெறப்போகிறது.  இதற்கிடையில்  ஆடியோ லான்ச் நின்று போனதால் லோகேஷ் அவர் பங்குக்கு லியோ படத்திற்கு ஒரு சைடு ப்ரோமோஷன் கொடுத்து வருகிறார்.

அத்துடன் படத்தில் இருக்கும் பல சீக்ரெட்களை மறைமுகமாக சொல்லி வருகிறார். மேலும் இப்படம் முழுக்க முழுக்க விஜய் படமாக தாறுமாறான சீன்கள் இருக்கும் என்று லோகேஷ் கூறியிருக்கிறார். அதனால் எப்படியும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: எவ்வளவு தாண்டா ஒருத்தனை போட்டு மிதிப்பீங்க.. வசூலில் ரெக்கார்டு வைக்க படாத பாடுபடும் லியோ

Trending News