புதன்கிழமை, ஜனவரி 22, 2025

திரிஷாவை விட அதிக கால்ஷீட் இவருக்கு தானாம்.. லியோவில் பரபரப்பை ஏற்படுத்தும் லோகேஷ்

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பகுதியை எட்டி விட்டது. இந்த சூழலில் படம் குறித்து முக்கிய அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அதாவது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய், திரிஷா இந்த படத்தில் இணைகிறார்கள். இந்த வாய்ப்பு திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாகத்தான் கிடைத்தது. இப்படத்தில் குந்தவையாக திரிஷா அசத்தி இருந்தார்.

Also Read : லியோ படத்திற்கு நிகராய் சிறுத்தை சிவாவின் மாஸ்டர் பிளான்.. விஜய்க்கு போட்டியாய் களம் இறங்கும் கங்குவா

அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்ட த்ரிஷா அடுத்த அடுத்த பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வந்தார். இனிமேல் லியோ படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ஸ்கோப் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் லோகேஷ் ட்விஸ்ட் வைத்துள்ளார்.

அதாவது இந்த படத்தில் திரிஷாவை காட்டிலும் மடோனா செபஸ்டினுக்கு தான் அதிக கால்ஷீட் வாங்கி உள்ளாராம் லோகேஷ். அதுமட்டுமின்றி கடைசியாக எடுத்த பாடலிலும் மடோனா இடம் பெற்று இருக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் இவர் நடித்துள்ளார் என்ற கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஏதாவது சின்ன கதாபாத்திரத்தில் தான் மடோனா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read : லோகேஷ் இயக்கும்போது நா செத்தா கூட பரவாயில்ல.. சென்டிமென்ட் ஆக பேசி லியோ பட வாய்ப்பு வாங்கிய வில்லன்

இந்நிலையில் லோகேஷ் வலுவான கதாபாத்திரத்தை இவருக்கு கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அர்ஜுனின் மனைவியாக தான் இப்படத்தில் மடோனா செபஸ்டின் நடிக்கிறார். ஆனால் கதையில் என்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறார் லோகேஷ் என்பது லியோ படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் மடோனாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும்  படம் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளதால் ரசிகர்கள் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

Also Read : லியோ பட நடிகைக்கு குவியும் வாய்ப்பு.. முதல் ஆளாக துண்டு போட்ட அருள்நிதி

Trending News