லியோ படத்தை வைத்து விஜய் செய்யும் அரசியல்.. திட்டம் புரியாமல் விசுவாசிகள்

Leo Movie-Thalapathy Vijay: முதல்வன் படத்தின் கிளைமாக்ஸில் அர்ஜுன் கடைசியில என்னையும் அரசியல்வாதி ஆகிட்டீங்களே என ஒரு வசனம் பேசி இருப்பார். இது இப்போது விஜய்க்கு தான் பொருத்தமாக அமைந்து விட்டது. தளபதி என்ன நடந்தாலும் சைலன்ட் மோடில் இருக்கிறார் என சொல்லப்பட்டது. உண்மையில் திட்டத்தை போட்டுக் கொடுத்துவிட்டு தான் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

நாம் ஹீரோவாக தெரிய வேண்டும் என்றால் யாரையாவது வில்லன் போல் காட்ட வேண்டும். இந்த கான்செப்டை தான் தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு பயன்படுத்துகிறார் விஜய். அதாவது அரசாங்கம் தனக்கு எதிராக இருப்பது போல் காட்டினால் தான் தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு மதிப்பு இருக்கும் என முடிவெடுத்து விட்டார் போல தெரிகிறது.

லியோவை சுற்றி நடக்கும் அத்தனை பிரச்சனைகளும் தளபதியின் மேற்பார்வையில் தான் நடக்கிறதாம். அதிகாலை காட்சி கேட்டு தயாரிப்பாளர் லலித் கோர்ட் வரைக்கும் சென்றது விஜய்யின் பேச்சை கேட்டு தானாம். துணிவு படத்தின் அதிகாலை காட்சியின் போது ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டதால் அதிலிருந்து அதிகாலை காட்சி என்ற ஒன்று தியேட்டர்களில் இல்லாமல் இருந்தது.

ஆனால் லியோ படத்திற்குத்தான் நான்கு மணி காட்சி இல்லை என சொன்னது மாதிரி தற்போது மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. நான்கு மணி காட்சிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த அதே நாளில் 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு உள்துறை செயலகம் வரைக்கும் லியோ பட சார்பில் வழக்கறிஞர்கள் சென்று வந்தனர். ஏழு மணி காட்சியும் கடைசியில் ரத்து செய்யப்பட்டது.

நடிகர் விஜய்க்கு எதிராக ஒட்டுமொத்த அரசாங்கமும் செயல்படுவது போல் இப்போது பொதுமக்கள் கண்களுக்கு தெரிகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் தான் விஜய் அரசியலுக்கு வரும்பொழுது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காகத்தான் விஜய் தயாரிப்பாளர் லலித் மூலம் பல முயற்சிகளை செய்திருக்கிறார். அரசியல் என்று வந்த பிறகு அவர் தன்னுடைய ரசிகர்களை கருத்தில் கொள்ளாமல் போய்விட்டாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இது போன்ற ஒரு சூழ்நிலையை சென்னையின் முக்கிய தியேட்டர்கள் பல நாளை லியோ படம் இங்கு ரிலீஸ் செய்யப்படாது என அறிவித்திருக்கிறார்கள். லாபத்தில் தயாரிப்பு தரப்பிலிருந்து ஷேர் கேட்கப்பட்டது தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்த ஷேர் கூட தளபதிக்காக தான் கேட்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லியோ பஞ்சாயத்து முடிந்ததா இல்லையா என நாளை விடிந்தால் தான் தெரியும்.

Next Story

- Advertisement -