திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

3 பேருக்கு அஜித் செய்த கைமாறு.. அதயும் ட்ரெண்டாக்கி கல்லாக்கட்டும் ஜெயிலர், லியோ படக்குழு

Actor Ajith: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களுள் ஜென்டில்மேனாக பார்க்கப்படுபவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இப்போது வெளியாகும் டாப் படங்களில் அஜித் செய்த விஷயத்தை தான் அப்படியே காப்பி அடித்து ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அஜித் தனது தொடக்க கால படத்தில் இணைந்த மூன்று இயக்குனர்களுக்கு எந்தவித கைமாறும் இல்லாமல் அவர்களுக்கு கார் வாங்கி கொடுத்து உதவி செய்தார். இதற்கு காரணம் தன்னுடைய இயக்குனர்கள் கஷ்டப்படக் கூடாது, தனக்கு வெற்றியை கொடுப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அஜித் கஷ்டப்பட்ட இயக்குனர்களுக்கு கார் வாங்கி கொடுத்தார்.

அஜித்தின் சினிமா கேரியரை புரட்டிப்போட்ட வாலி படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா, அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு வரும்போது நடந்து தான் வருவார். அதை பார்த்த அஜித் என்னுடைய இயக்குனர் நடந்து வரக்கூடாது என படம் துவங்கிய போதே அவருக்கு பைக் வாங்கி கொடுத்தார். அதன் பின் வாலி படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்துவிட்டு எஸ்ஜே சூர்யாவிற்கு அஜித் காரை பரிசாக அளித்தார். 

Also Read: லோகேஷ்க்கு லியோ காட்டிய பயம்.. தலைவர் 171 படத்தில் எடுக்கும் புது முயற்சி

அஜித் செய்த கைமாறு

மேலும் அஜித்துக்கு காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சரணுக்கும் தல கார் வாங்கி பரிசளித்திருக்கிறார். இவர்களுடன் முகவரி படத்தை இயக்கிய VZ துரைக்கும் அஜித் காரை பரிசளித்துள்ளார்.

அஜித் அப்போ கஷ்டப்பட்ட இயக்குனர்களுக்கு கார் வாங்கி கொடுத்து அவர்களெல்லாம் ஜம்முனு கார்ல போக வைத்து அழகு பார்த்தார். ஆனால் இப்போ அது ட்ரெண்ட் ஆகிவிட்டது. கோடிக்கணக்குல கார் வாங்கி தருகிறார்கள். ஆனால் இதில் ஒரு சுயநலம் இருக்கிறது.

100 கோடி வசூலான படங்களுக்கு டேக்ஸ் கட்டணும். அத இப்படி கார் வாங்கி கொடுத்தால் டாக்ஸ் ஃப்ரீ என்பதற்காகவே செய்கின்றனர். இது தெரியாம நாமெல்லாம் இதனை மிகப்பெரிய விஷயமா பார்த்திருக்கிறோம். அதிலும் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் மற்றும் தளபதி விஜய்யின் லியோ  படக்குழுவினருக்கும் தயாரிப்பு நிறுவனம் இதை தான் செய்து கல்லா கட்டினார்கள்.

Also Read: லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட்.. கதைய யோசிக்க சன் பிக்சர்ஸ கொடுக்கும் ரூம் வாடகை?

Trending News