திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தளபதி படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லாமல் எப்படி?. லியோவின் அதிரடியான அப்டேட்

Leo Audio Launch: கடந்த சில நாட்களாகவே இணையத்தில் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் விஷயம் லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் நடக்காது என்பதுதான். மிகப்பெரிய ஹைப்பை உண்டாக்கி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை வெளிநாடுகளில் நடத்த படக்குழுவினர் பெரிதும் முயற்சி செய்தனர்.

அக்டோபர் மாதம் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாவதால் செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆடிட்டோரியம் அங்கு கிடைக்கவில்லையாம். அதன் பிறகு சென்னையிலேயே நடத்தலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

Also Read : நான் அவ்வளவு திறமையான ஆள் கிடையாது.. லியோ படத்தை மறுத்ததற்கு விஷால் கூறிய மொக்க காரணம்

ஆனாலும் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் மற்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதால் இந்த முறை ஆடியோ லான்ச் நடத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனராம். எப்போதுமே தளபதி ரசிகர்கள் அவரின் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தான் ஆர்வமாக காத்திருப்பார்கள்.

காரணம் அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடக்கவில்லை. ஏனென்றால் அப்போது கொரோனா தொற்று இரண்டாவது அலை இருந்ததால் நடத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். ஆனால் அப்போதும் விஜய் சின்னத்திரையில் பேட்டி கொடுத்திருந்தார்.

Also Read : லியோவை விட பல மடங்கு பில்டப்புடன் வெளியான ரஜினியின் படம்.. கடைசியில் மண்ணை கவியது தான் மிச்சம்

நெல்சன் தளபதியை பேட்டி எடுத்திருந்தார். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்ததால் சன் டிவியில் ஒளிபரப்பானது. இப்போது லியோ படத்திற்கும் இசை வெளியீட்டு விழா நடக்காது என்று நினைத்த நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது.

இதில் 100% உறுதியாக ஜெயிலர் படத்தில் ரஜினி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய்யின் பேச்சு இருக்க உள்ளது. அதற்காகத்தான் இப்போது தளபதி ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல விஜய்யின் குட்டி ஸ்டோரியும் கண்டிப்பாக இதில் இடம்பெற இருக்கிறது.

Also Read : லியோவை ஓரம் கட்ட வரும் தளபதி 68.. லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் வெங்கட் பிரபுவின் இந்த ஸ்கிரிப்ட்

Trending News