Leo Movie: ஜெயிலர் அலை ஓய்ந்த நிலையில் இப்போது லியோ அலை அடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த வருடம் பெரிய நடிகர்களின் படங்களாக பார்க்கப்படுவது ஜெயிலர் மற்றும் லியோ தான். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து விட்டது.
இந்நிலையில் ஜெயிலர் வசூலை லியோ படம் முறியடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சில ரஜினி ரசிகர்கள் லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாது என சவால் விட்டிருந்தனர். ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசுக்கு ஒன்பது நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது.
Also Read : உடைக்க முடியாத சாதனையை படைத்த ஜெயிலர் முத்துவேல் பாண்டியன்.. 72 வயதிலும் நின்னு பேசும் ரஜினி
அதன்படி டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1800 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. அதன் பிறகு படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதியது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் எதிர்பார்த்ததை விட வசூலை வாரி குவித்தது.
இதன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக கலாநிதி மாறனும் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கியிருந்தார். இந்நிலையில் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகிறது.
Also Read : ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி
லியோ படத்தின் முன்பதிவு 42 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. அதுவும் குறைந்தது 5 மணி நேரத்திலேயே கிட்டதட்ட 2500 டிக்கெட்களுக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிக்கெட் முன்பதிவிலேயே இப்போது ஜெயிலர் சாதனையை லியோ முறியடித்து இருக்கிறது.
ஆகையால் கண்டிப்பாக லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் லியோ ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுகிறாரா என்பது லியோ படம் வெளியானால் தெரிந்துவிடும்.
Also Read : லியோ படத்தை மண்ணோடு புதைக்க திட்டம்போடும் உதயநிதி.. ரெட் ஜெயிண்ட்டை வைத்து விஜய்க்கு எதிராக எடுக்கும் முடிவு