வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

2000 டான்சர்களோடு மரண குத்து போட்ட தளபதி.. லியோவின் ‘நா ரெடி’ பாடல் வீடியோ

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் தான் லியோ. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் ஆனது தளபதியின் 49வது பிறந்த நாளான இன்று வெளியிட திட்டமிட்டபடி, சில நிமிடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பாடலின் ப்ரோமோவை கடந்த ஜூன் 20ம் தேதியே வெளியிட்டு பாடலின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். அதுமட்டுமல்ல கடந்த சில தினங்களாக விஜய்யின் அரசியல் வருகையை பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் மத்தியில் லியோ படம் காணாமல் போனது. இந்த சமயத்தில் லியோ படத்தின் ‘நா ரெடி’ என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் தங்களது ட்ராக்கிற்கு கொண்டு வந்திருக்கின்றனர் லியோ பட குழுவினர்.

Also Read: ஒரே சமயத்தில் தலைவர், தளபதி விசுவாசிகளை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை.. அநியாயத்திற்கு கலாய்த்து போட்ட ட்விட்

இந்த பாடல் ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் ‘நா ரெடி’ பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி இருக்கிறார். அது மட்டுமல்ல இவருடன் இணைந்து அனிருத் இசையமைத்து பாடியும் உள்ளார். இந்த படத்தில் வரும் ராப் பகுதிகளை பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோளாறு பாடியுள்ளார். அத்துடன் 2000 டான்ஸர்களுடன் விஜய் இந்த பாடலில் நடனமாடி ரணகளம் செய்திருக்கிறார். இந்த பாடலில் விஜய்யுடன் மன்சூர் அலிகானும் கையில் சரக்கு கிளாசுடன் ஆட்டம் போட்டிருக்கிறார்.

பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி, பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அத்துடன் இந்த பாடலில் புகை, மது குறித்த வரிகள் தான் பெரும்பாலும் இடம்பெற்று இருக்கிறது. கில்லி, கத்தி என விஜய்யின் படங்களை தொடர்புப்படுத்தும் வரிகளும் பாடலை மேலும் ரசிக்க வைக்கிறது.

Also Read: மேடையில் கைதட்டலை வாங்கிய தளபதியின் டக்கரான 6 குட்டி ஸ்டோரி.. லியோவிற்காக காத்திருக்கும் திரையுலகம்

விஜய்யின் அரசியல் பிரவேச கருத்துகளும் இந்தப் பாடலில் நிரம்பி கிடக்கிறது. தளபதியின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்கள் பல விதங்களில் தங்களது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். பலவிதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் கொடுக்கும் ட்ரீட்டாகவே விஜய் இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார்.

இப்போது லியோ படத்தின் ‘நா ரெடி’ லிரிக்ஸ் வீடியோ தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த பாடல் ஏகப்பட்ட பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது, நிச்சயம் இந்த பாடல் வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கப் போகிறது.

லியோ படத்தின் ‘நா ரெடி’ லிரிக்ஸ் வீடியோ இதோ!

Also Read: 40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்

- Advertisement -

Trending News