திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரோலக்சுக்கு போட்டியாக வந்த ஹரால்ட் தாஸ்.. அர்ஜுனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லியோ வீடியோ

Actor Arjun: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விக்ரம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள விட்ட லோகேஷ் லியோ மூலம் மிகப்பெரும் சம்பவத்தை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இப்படம் பூஜை போடும் போதே பல அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை திணறடித்தது. அதிலும் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் என படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் லிஸ்ட்டே அனுமார்வால் போல் நீண்டு கொண்டே போனது.

Also read: லியோ போட்ட விதை, செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பும் ஆக்சன் கிங் .. என்ன கைவசம் இத்தனை படங்களா!

இப்படி எல்லா திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களையும் அள்ளிக்கொண்டு வந்து லியோவில் நடிக்க வைத்திருக்கும் லோகேஷ் இதை இரண்டு பாகமாக எடுக்க போவதாக கூட செய்திகள் கிளம்பி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அசத்தலான அப்டேட் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிலும் ஹரால்ட் தாஸ் வரப்போகிறார் என்று வெளியான அறிவிப்பை பார்த்ததுமே ரசிகர்கள் குஷியானார்கள். ஏனென்றால் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருக்கான சர்ப்ரைஸ் ஒன்று வீடியோவாக வெளிவரும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

Also read: 61 வயதில் பிரம்மாண்ட கோவில், பங்களா, 42 வருட அனுபவம்.. ஆக்சன் கிங்கின் மொத்த சொத்து மதிப்பு

அதாவது சமீபத்தில் சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு லியோ பட குழு தரமான ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதை தொடர்ந்து இன்று ஹரால்ட் தாஸ் தரிசனத்திற்காக ரசிகர்கள் காலை முதலே காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

அதன்படி காரில் இருந்து கெத்தாக இறங்கும் அர்ஜுன் ரோலக்சுக்கு போட்டியாக வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். வெறித்தனமாக ஒருவரின் கையை வெட்டுவது போல் அவருடைய இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அதிலும் வாயில் சிகரட்டை வைத்துக் கொண்டு இருக்கும் அவருடைய லுக் வேற லெவலில் இருக்கிறது. அந்த வகையில் இந்த வீடியோ நிச்சயம் அவருக்கான சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கிறது.

 

Trending News