திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லியோவுக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் சம்பந்தமில்ல.. உண்மையை உரைக்கிற மாதிரி சொல்லிய தயாரிப்பாளர்

Leo-Red Gaint: இப்போது எங்கு திரும்பினாலும் லியோ பற்றிய விவாதங்களை தான் பார்க்க முடிகிறது. ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படம் தொடர்பான சில சர்ச்சைகளும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் உதயநிதியை சம்பந்தப்படுத்தி வெளிவந்த செய்திக்கு தயாரிப்பாளர் அதிரடியான பதிலை கொடுத்திருக்கிறார்.

அதாவது கடந்த சில நாட்களாகவே லியோ ஆடியோ லான்ச் விவகாரத்தில் ரெட் ஜெயண்ட் தலையீடு இருப்பதாக ஒரு செய்தி பூதாகரமாக கிளம்பியுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ லான்ச் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

Also read: விஜய்யின் அப்பாவால் லியோவுக்கு வந்த ஆபத்து.. ஜெயிலர் வசூலை முறியடிக்க வாய்ப்பே இல்ல

ஆனால் இப்போது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றும் முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தர தயாரிப்பாளருக்கு நெருக்கடி தரப்பட்டதாகவும் மீடியாவில் செய்திகள் வலம் வந்தது. ஆனால் அதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது என்று லலித் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது திட்டமிட்டபடி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் இப்போது ஆரம்பமாகிவிட்டது. அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் அரங்கத்தில் செட் போடும் பணிகளையும் தயாரிப்பாளர் தொடங்கியிருக்கிறார்.

Also read: ஜெயிலர் போல் லியோ படத்திற்கு மாநிலம் வாரியா ஏற்பட்ட கடும் நெருக்கடி.. பெரும் தலைவலியில் தளபதி

அது குறித்து தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ள லலித், லியோ ஆடியோ லான்ச் தொடர்பாக சில நெகட்டிவ் விஷயங்கள் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது போன்ற தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இந்த உண்மையை உரக்க கூறியுள்ளார். இதன் மூலம் உதயநிதிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில் குட்டி கதை சொல்ல தயாராகி இருக்கும் விஜய்யின் அதிரடியை காண ஒட்டு மொத்த மீடியாக்களும் இப்போது ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

Also read: ஏஆர் ரகுமானால் லியோ ஆடியோ லாஞ்சுக்கு பறக்கும் கட்டளை.. மறைமுகமாக உதயநிதி கொடுக்கும் நெருக்கடி

Trending News