வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோ இரண்டாம் பாதிக்கு குவியும் பாராட்டுக்கள்.. கடைசி 40 நிமிடத்தில் மொத்தமாக அள்ளிய வசூல்

Leo Movie 2nd Half Review: லியோ படத்திற்காக பல நாட்களாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது தான் திருவிழா மாதிரி கோலாகலமாக திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் லோகேஷின் கதை எந்த அளவிற்கு வெறித்தனமாக தெறிக்கவிட்டு இருக்கிறார் என்பதையும், அதில் விஜய் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கவே கோடான கோடி ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் ரசிகர்கள் அனைவரும் முதல் நாளே முதல் ஷோவை பார்க்க வேண்டும் என்று வெறித்தனமான ஆசையுடன் போய் இருக்கிறார்கள். அதில் முதல் பாதியை பார்த்துவிட்டு அவர்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதாவது ஓப்பனிங் காட்சியை மாசாக இருக்கிறது.

அதிலும் விஜய்யின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும் விதமாக ட்ரீட்டாக இருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாதியும் வெறித்தனமான ஆக்சன் காட்சிகளுடன் விஜய் தெறிக்க விட்டிருக்கிறார்.

முக்கியமாக கடைசி 40 நிமிஷ காட்சியில் விஜய், அர்ஜுன் மற்றும் அனிருத் இசை காம்போ ரொம்பவே அழகாக இருக்கிறது. அத்துடன் விஜய் நடிப்பு ரொம்பவே பிரமாதமாக இருக்கிறது. கடைசி 20 நிமிஷ காட்சி ஒட்டுமொத்த நெகட்டிவியும் மறந்து கைத்தட்டலை கொடுக்கும் அளவிற்கு அற்புதமாக இருக்கிறது என்று ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

review-2-half.
review-2-half.

அந்த வகையில் எப்படியும் லியோ படம் 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிடும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதனால் லோகேஷ் மற்றும் விஜய்யின் கேரியர் இன்னும் அதிகமாகவே டாப்புக்கு போகப்போகிறது. தொடர்ந்து இவர்களுடைய கூட்டணி பிளாக் பாஸ்டர் வெற்றி அடைந்து வருகிறது.

leo 2 half review
leo 2 half review

ஏற்கனவே லோகேஷ் புராணம் தான் சினிமா இண்டஸ்ட்ரியல நாலா பக்கமும் பரவி வருகிறது. இதுல லியோ படம் தாறுமாறான வெற்றியை அடைவதால் இன்னுமே இவருடைய மார்க்கெட் உயர்ந்து அனைவருடைய வாண்டட் இயக்குனர்கள் லிஸ்டில் இவர் மட்டும்தான் நிற்கப் போகிறார் என்பது உறுதியாகி விட்டது. ஆக மொத்தத்தில் லியோ படம் வெறித்தனமாக இருக்கிறது.

Trending News