புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எப்படியாச்சும் ஜெயிலர் பட வசூலை முந்திடனும்.. விக்ரமிடம் மண்டியிட்டு லியோ பட குழு செய்த நரி தந்திரம்

Leo – Jailer: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பாக்ஸ் ஆபிஸின் கிங்காக இருந்து வருகிறார் தளபதி விஜய். ஆனால் இந்த படங்கள் எல்லாமே மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களுடன் மோதாமல் சோலோவாக ரிலீஸ் ஆனவை. மேலும் சமீப காலமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவுமே 100 கோடி வசூலை தாண்டாததால் விஜய்க்கு அவருடைய படங்கள் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

ஆனால் தற்போது விஜய் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி இருக்கிறார். அவருடைய படம் ரிலீஸ் ஆவதற்கு சரியாக ஒரு மாத இடைவெளிக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி 600 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இதனால் கண்டிப்பாக லியோ படம் ரிலீஸ் ஆகும்போது அதன் வசூல் ஜெயிலர் வசூல் உடன் கம்பேர் செய்து பேசப்படும்.

Also Read:அப்பா சொன்ன மாதிரி சஞ்சய் படத்தின் ஹீரோ இவர்தான்.. எல்லாம் புது பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

லியோ படம் ஒருவேளை வசூலில் ஜெயிலர் படத்தை விட கொஞ்சம் கம்மியானாலும் விஜய் இத்தனை நாள் சேர்த்து வைத்த இமேஜ், டேமேஜ் ஆவதோடு, அவருடைய பட வாய்ப்புகளில் இருந்து சம்பளம் வரை எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் விஜய் மற்றும் லியோ பட குழு ரொம்பவும் உஷாராக காய் நகர்த்தி வருகிறார்கள்.

அக்டோபர் 19ஆம் தேதி என அவர்கள் குறித்திருக்கும் தேதி கூட ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி தான். விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள், வசூலை அள்ளிவிடலாம் என்பதுதான் இந்த பட குழுவின் பெரிய திட்டம். மேலும் லியோ படம் சோலோவாக ரிலீஸ் ஆகவேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.

Also Read:விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

நடிகர் விஜய்யின் திட்டத்தில் மண்ணை அள்ளி போடும் விதமாக, சீயான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த தேதியை ஒட்டி தான் ரிலீஸ் ஆக இருந்தது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இதனால் சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழுந்து விடலாம் என முடிவெடுத்து இருக்கிறது லியோ பட குழு. துருவ நட்சத்திரம் படத்தை லியோவுடன் ரிலீஸ் செய்யக்கூடாது என தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தலைமையில் பேசப்பட்டு தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

Also Read:லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

Trending News