புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெறிபிடித்த ஓநாயுடன் மோதும் லியோ.. ஆக்ரோஷமான போஸ்டரோடு வெளிவந்த ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

Leo Trailer: ட்விட்டர் பக்கத்தை திறந்தாலே லியோ பற்றிய செய்திகள் தான் வந்து விழுகிறது. அந்த அளவுக்கு கடந்த சில வாரங்களாகவே இதன் ஆதிக்கம் தான் சோசியல் மீடியாவில் களைகட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் இசை வெளியீட்டு விழா நடைபெறாத சூழலில் இப்போது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

சில நாட்களாகவே இது குறித்த செய்திகள் பரப்பரப்பை கிளப்பிய நிலையில் தற்போது தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமான தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி லியோ ட்ரெய்லர் வரும் 5ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது.

Also read: ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்

இதைத்தான் தற்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். அதிலும் இந்த அறிவிப்போடு வெளியான போஸ்டர் ஒட்டுமொத்த ஆர்வத்தையும் தூண்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை பல போஸ்டர்களை படகுழு வெளியிட்டு இருக்கிறது.

ஆனால் இதுதான் சரவெடியாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். அதாவது பனிப்பிரதேசத்தில் முதுகில் ரத்த காயத்தோடு விஜய் ஆக்ரோஷமாக ஓநாயுடன் சண்டை இடுவது போன்று அந்த போஸ்டர் அமைந்திருக்கிறது. அந்த ஓநாயும் ரத்த வெறி கொண்டு தாக்குவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

Also read: வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

இப்படியாக வெளிவந்துள்ள போஸ்டரை பார்க்கும் போதே அனல் தெறிக்கிறது. அப்படி என்றால் படம் முழுக்க இது போன்ற பல தரமான சம்பவங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனாலயே இப்போது ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் தவம் இருக்க தொடங்கியுள்ளனர்.

வெறிபிடித்த ஓநாயுடன் மோதும் லியோ

leo-poster
leo-poster

Trending News