புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யின் அப்பாவால் லியோவுக்கு வந்த ஆபத்து.. ஜெயிலர் வசூலை முறியடிக்க வாய்ப்பே இல்ல

Vijay-Leo: தமிழ் ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் தான் விஜய்யின் லியோ. பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட திரை நட்சத்திரங்களை இந்த படத்தில் உள்ளடக்கி உள்ளார் லோகேஷ். அதோடு மட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு திரிஷா மற்றும் விஜய் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதி ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது. இப்போது எதிர்பாராத விதமாக லியோ படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது கேரளாவில் லியோ படத்தை இப்போதே பாய்காட் செய்து வருகிறார்கள்.

Also Read : நேரு ஸ்டேடியத்தை தெறிக்க விடப் போகும் லியோ பட ஆடியோ லான்ச்.. உஷாராகி தளபதி போட்டோ 5 கட்டளை

இதற்கு காரணம் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இணையத்தில் கருத்துப் போர் ஏற்பட்டிருக்கிறது. அப்போது விஜய் ரசிகர்கள் மோசமாக மலையாள சினிமா மற்றும் மோகன்லாலை விமர்சித்ததால் இப்போது லியோ படத்தை அங்கு வெளியிடக் கூடாது என்பது போல பிரச்சனை செய்து வருகிறார்கள்.

இதனால் பாய்காட் லியோ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக வேண்டுமென்றே அஜித் ரசிகர்கள் இதை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். மற்றொருபுறம் விஜய் ரசிகர்கள் கேரளாவில் லியோ படத்தை வரவேற்கிறோம் என்று ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : ஜெயிலர் வசூலை முறியடிக்குமா லியோ.? படத்தைப் பார்த்த தளபதியின் ரியாக்சன் இதுதான்

அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே மோகன்லால் விஜய்க்கு அப்பாவாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இவர்களது காம்போ ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட நிலையில் இப்போது அப்பாவால் விஜய்க்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆகையால் லியோ படத்திற்கு கேரளாவில் பெரிய அளவில் வசூல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

சமீபகாலமாகவே ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்து விடும் என சினிமா விமர்சகர்கள் பலர் கூறி வந்தனர். இப்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆகையால் இந்த சம்பவத்தின் எதிரொளி லியோ வசூலில் பிரதிபலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

Trending News