புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மொத்த கண்ட்ரோலையும் குத்தகைக்கு எடுத்த லியோ.. மிரட்டும் புது போஸ்டர்

Leo: லியோ ரிலீஸ் தேதி நெருந்த நெருங்க ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனமும் அதன் பக்கம் தான் இருக்கிறது. ஏற்கனவே புதுப்புது சர்ப்ரைஸ்களை கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்த படகுழு இப்போது அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே நேற்று தெலுங்கு திரையுலகை மிரள வைக்கும் வகையில் ஒரு போஸ்டரை தயாரிப்பு தரப்பு வெளியிட்டு இருந்தது. அதில் அமைதியாக இருந்து போரை தவிர்க்கவும் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அது வைரலான நிலையில் தற்போது அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

Also read: அஜித்தை விட 6 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய விஜய்.. அதைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்

இது கன்னட திரை உலகை குறிவைத்து வந்திருக்கிறது. அதன்படி போஸ்டரில் துப்பாக்கி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் நடுவில் விஜய் தன் முகத்தில் பல உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமர்ந்திருப்பது போலவும் ரத்தம் சிதறி இருப்பது போன்றும் காட்டப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அமைதியாக இருந்து நீங்கள் தப்பிப்பதற்கு திட்டமிடுங்கள் என்ற வாசகத்துடன் கன்னடத்தில் பர்ஜரி என்ற பெயரில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. ஏற்கனவே இப்படம் ரத்த களறியாக ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று படகுழு வெளியிடும் அப்டேட்டை பார்க்கும் போதே தெரிகிறது.

Also read: மாஸ் லுக்கில் தளபதி.. வைரலாகும் லியோ புதிய போஸ்டர்

லோகேஷ் படங்கள் இது போன்ற சாயலில் தான் இருக்கும் என்பதால் லியோவை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் போஸ்டரும் அதை உறுதிப்படுத்துவது போல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் வெற்றி கொடியை பறக்க விட திட்டமிட்டுள்ள லியோ டீம் இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரும் சம்பவத்தையும் நிகழ்த்த இருக்கின்றனர்.

அதற்கான வேலைகள் இப்போது ஜோராக நடந்து வரும் நிலையில் சோசியல் மீடியா முழுவதையும் படகுழு தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து விட்டது. ஆக மொத்தம் இனிமேல் லியோவின் ஆட்டம் தான் இணையதளத்தை கிடுகிடுக்க வைக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மிரட்டும் லியோ புது போஸ்டர்

leo-new-poster
leo-new-poster

 

Trending News