வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

2 விஷயங்களில் மட்டுமே ஜெயித்த லியோ.. லோகேஷ் செய்த அந்த ஒரு தவறு

Vijay in Leo : எப்போதுமே ஒரு விஷயத்துக்கு ஓவராக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டு இருந்தால் அது ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். அது தற்போது லியோ படத்தில் உறுதியாகி இருக்கிறது. அதாவது லோகேஷ் படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளப்பட்டிருந்தது.

அதனாலயே விஜய்க்கு இந்தப் படம் வெறித்தனமான வெற்றியைக் கொடுக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த வகையில் இன்று வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் சில விஷயங்களை நம்பி போன ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் லியோ படத்தில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தான் லோகேஷ் நன்றாக பண்ணியிருக்கிறார் என்று சொல்வதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. அதில் ஒன்று அனிருத். இவருடைய பேக்ரவுண்ட் மியூசிக் சும்மா தாறுமாறாக அள்ளித் தெறிக்க விட்டிருக்கிறார். லியோ படத்திருக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய ஹைலட்டாக இவருடைய மியூசிக் தான் இருக்கிறதாம்.

இன்னொரு விஷயம் ஆடியன்சை கவர்ந்தது என்னவென்றால் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு. இவருடைய சண்டைக்காட்சிகள் அனைத்துமே விஜய்க்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய அளவிற்கு சிறப்பாக இருக்கிறது. இப்படி இந்த ரெண்டு விஷயங்கள் தான் லியோ படத்தில் சொல்லிக்கும்படியான பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.

இதுல லோகேஷின் மற்ற படங்களில் உள்ள விறுவிறுப்பு எதிர்பார்த்த அளவிற்கு இந்தப் படத்தில் இல்லையாம். முக்கியமாக  Lcu வைக்கணும் என்ற பெயரில் சும்மா பெயருக்காக ஏதோ கதையை கொண்டு வந்திருக்கிறார். அத்துடன் லவ் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் கூட இல்லாமல் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

இதனால் அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் இப்படத்தை பார்த்து என்ஜாய் பண்ணும் அளவிற்கு ஏதும் இல்லையாம். ஆக மொத்தத்தில் அதிக எதிர்பார்ப்பு வைத்து யாரும் போக வேண்டாம். சாதாரண படத்தை பார்க்க போகிற மாதிரி போனால் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம் என்று ரசிகர்கள் அவர்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News