வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் பட சாதனையை முறியடிக்கும் லியோ.. 2000 பேரை குத்தகைக்கு எடுத்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இப்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். விஜய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் இந்த படத்திற்காக அவர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் சங்கர் பட சாதனையை முறியடிக்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறார்.

அதாவது லியோ படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு புது முயற்சியை லோகேஷ் எடுத்துள்ளாராம்.

Also read: கமலுக்காக பார்க்க வேண்டிய 5 படங்கள்.. உலக நாயகனின் இந்த படங்களை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க

அது என்னவென்றால் லியோ படத்தின் பாடல் காட்சியில் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் இருந்து இத்தனை பேர் கிடைப்பது சாத்தியம் இல்லை என்பதால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழி டான்சர்களையும் லோகேஷ் ஒரு மாத காலம் குத்தகைக்கு எடுத்து இருக்கிறாராம்.

அந்த வகையில் இந்த ஒரு பாடல் மட்டுமே 30 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக பல லட்சங்களையும் தயாரிப்பாளர் வாரி இறைத்திருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போதே கட்டாயம் இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: 16 வருட சினிமா வாழ்க்கையில் வெங்கட் பிரபு கொடுத்த 5 நச் படங்கள்.. சூப்பர் ஹிட் அடித்த சென்னை 28

அதன்படி லோகேஷ் இப்படி ஒரு விஷயத்தை செய்து இந்தியன் பட சாதனையை முறியடிக்க தயாராகி விட்டார். ஏனென்றால் இந்தியன் முதல் பாகத்தின் பாடல் காட்சியில் தான் அதிக நடன கலைஞர்களை பயன்படுத்தி இருக்கின்றனர். அதன் பிறகு லியோ படம் தான் அந்த சாதனையை செய்ய இருக்கிறது.

மேலும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் தான் அதிக பிரம்மாண்டம் இருக்குமாம். அந்த வகையில் இந்த இரு படங்களுக்கும் இடையே இப்போதே ஒரு போட்டி ஆரம்பித்திருக்கிறது. இதில் எது அதிக சாதனை படைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: பிரம்மாண்ட தயாரிப்பாளரின் 100-வது படத்தில் கமிட்டான விஜய்.. லியோவை ஓரம் கட்ட வரும் தளபதி 68

Trending News