வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

போடு வெடிய, ஒரு நாளுக்கு முன்பே வெளியாகும் லியோ.. முத்துவேல் பாண்டியன் வசூலை உடைக்க போறது உறுதி

Leo-Vijay: மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணத்தினால் அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகிறது. படத்தின் பூஜை போட்ட போதே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சரியாக சொன்ன தேதியில் படத்தை வெளியிட இருக்கின்றனர்.

ஆனால் இப்போது அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நாளுக்கு முன்னதாகவே லியோ படம் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை காட்சி நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அதிகாலை காட்சி திரையிடுவார்கள்.

Also Read : விஜயகாந்துக்கு இதை செய்யாமல் விஜய் அரசியலில் ஜொலிக்க முடியாது.. நன்றி கெட்டவன் என்ற பெயர் தேவையா!

இப்போது சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதால் 11 மணிக்கு தான் முதல் காட்சி என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்படியாக அக்டோபர் 18 ஆம் தேதியே சம்பவத்துக்கு தயாராகிறார் லோகேஷ், விஜய் கூட்டணி.

அதாவது தமிழகத்தில் லியோ படத்தின் பிரீமியர் அக்டோபர் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் நடக்கும் என்று வெற்றி திரையரங்கு உரிமையாளர் ராகேஷ் கௌதமன் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

Also Read : சென்சாரையே காது கிழிய கதறவிட்டாரா லோகேஷ்.? விஜய் மார்க்கெட்டை உடைக்க வெளியான போலி சர்டிபிகேட்

இந்த செய்தி விஜய் ரசிகர்களை மத்தியில் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ள நிலையில் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கின்றனர். பொதுவாகப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதை அவர்களது ரசிகர்கள் தீபாவளி போல் கொண்டாடுவார்கள். அதேபோல் இப்போது போடு வெடிய போடு என ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பம் முதலில் லியோ படத்திற்கு பல சிக்கல் மற்றும் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

போதாக்குறைக்கு லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியையும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது. இப்போது அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக ஒரு நாள் முன்னதாகவே லியோ படம் வருவது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். இதன் மூலம் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் வசூலை கண்டிப்பாக லியோ முறியடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் ஜெயிலர் படம் 650 கோடி வசூல் செய்த நிலையில் கண்டிப்பாக லியோ படம் 1000 கோடி வசூல் செய்யும் என உறுதியாக நம்புகின்றனர்.

rakesh-gawthaman
rakesh-gawthaman

Also Read : விஜய் மீது வைக்கப்படும் ரெண்டு குற்றச்சாட்டு.. உஷாராகி ஒதுங்கிய சூப்பர் ஸ்டார்

Trending News