நாடு முழுக்க கோவிட் பிரச்சனை காரணமாக பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும ஊரடங்கை அமல் படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதற்காக மக்கள் அதிகமாக கூடும் தியேட்டர்கள் வர்த்தக வளாகங்கள் என மக்களின் பொழுதுபோக்கு தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன.
மக்களின் பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் தடை செய்யப்படவே மக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கு வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். கொரனா ஊரடங்கு காரணமாய் தியேட்டர்கள் மூடி வைக்கப்பட்ட நிலையில் சினிமா ரசிகர்களுக்கு கைகொடுத்தது என்னவோ ஓடிடி தான்.
படங்களை ரிலீஸ் செய்யும் பொறுப்பை தியேட்டர் உரிமையாளர்கள் வினியோகஸ்தர்கள் போல ஓடிடி இணைதளம் கையாள ஆரம்பித்தது. இதற்காகவே சில படங்களும் தயாரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில பெரிய ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்களையும் கூட நல்ல விலை கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்தது ஓடிடி வாயிலாக. எப்போதுமே ஹாலிவுட் படங்களின் நாயகன் நாயகிகளுக்கு என்று தனி மார்க்கெட் உண்டு
அந்த வகையில் ஹாலிவுட் நடிகர் “லியோனார்டோ டிகாப்ரியோ” அவர் நடித்திருக்கும் “டோன்ட் லுக்” என்கிற ஹாலிவுட் படத்திற்காக இந்திய ரூபாயில் 233கோடிகளை ஊதிமாக பெறுகிறாராம். மேலும் இப்படத்தின் நாயகியோ இந்திய மதிப்பில் 186 கோடிகளை ஊதியமாக பெறுகிறாரம்.
ஓடிடியில் உலகம் முழுக்க இப்படம் அதி விரைவில் வெளியாக உள்ளது. படத்திற்கான ரிலீஸ் தேதிகள் படக்குழுவால் விரைவில் அறிவிக்கப்படும்.