திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே கான்செப்ட்டை காப்பியடித்த சிறுத்தை சிவா.. அஜித்தை வைத்து பார்த்த 100 கோடி லாபம்

Director Siruthai Siva: பன்முகத் திறமை கொண்டு தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களில் சிறுத்தை சிவாவும் ஒன்று. அவ்வாறு இருக்கையில், தன் படத்தை தானே ரீமேக் செய்து வெற்றி கண்ட தகவலை இங்கு காண்போம்.

அவ்வாறு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை பட வெற்றியை கொண்டு பெரிதும் பேசப்பட்டவர் சிறுத்தை சிவா. இவரின் படைப்பில், அஜித்தை வைத்து மேற்கொண்ட படங்கள் ஆன வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்றவை இவரின் வெற்றி படங்களாகும்.

Also Read: நிஜ அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுத்த 5 ரீல் நடிகர்கள்.. எப்போதும் ஃபேவரிட் ஆக இருக்கும் அமாவாசை

அதிலும் குறிப்பாக 2015ல் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் வேதாளம். இப்படத்தில் ஆரம்பித்தில் கேங்ஸ்டாராய் இருக்கும் அஜித், சூழ்நிலைகளைக் கேட்ப தன்னூல் இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், தங்கச்சி சென்டிமென்ட் நிறைந்த படமாகவும் அமைந்திருக்கும்.

மேலும் இப்படம் கொல்கத்தாவில் இருப்பது போல கமர்சியலாய் காட்டப்பட்டு அதன் பின் சென்டிமென்டில் தட்டி தூக்கி இருப்பார். இப்பட கான்செப்டை போலவே தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஒரு படம் இருக்கிறது. அதுதான் விஷால் நடிப்பில் வெளிவந்த வெடி.

Also Read: பாக்கியாவால் வில்லனாக மாறி புலம்பி தவிக்கும் கோபி.. உசுப்பேத்தி விடும் ராதிகா

பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வெடி. இப்படத்தில் பூனம் கவுர், சமீரா ரெட்டி, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் சௌர்யம் என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை தெலுங்கில் சிறுத்தை சிவா தான் இயக்கியிருப்பார்.

தெலுங்கில் கிடைத்த வெற்றியை கொண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டு இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் வேதாளம் என்னும் பெயரில் ரீமேக் செய்து அஜித்தின் நடிப்பில் சுமார் 115 கோடி வசூலை பெற்றார். இப்படமும் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சின்ன வயசுலயே மாமா பொண்ணுக்கு ரூட் விட்ட சிவகார்த்திகேயன்.. ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ

Trending News