வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நாளைக்கு ரிலீஸ் வச்சிட்டு முக்கியமானது செய்யத் தவறிய சசிகுமார்.. மெத்தனம் காட்டும் படக்குழுவினர்

இயக்குனராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் சசிகுமார். ஆனால் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான படங்களை பார்க்கும்போது இவர் பேசாமல் இயக்குனராகவே இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு மொக்கையான படங்களை வழங்கி வருகிறார் சசிகுமார்.

அந்த வகையில் இறுதியாக நடிப்பில் வெளியான எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் ஆகிய படங்கள் அட்டு பிளாப். அதனால் தற்போது தனக்கு வெற்றி படமாக அமைந்த சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனோடு சசிகுமார் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் கொம்பு வச்ச சிங்கம்டா.

இந்த படமாவது நல்லா இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருப்பினும் சுந்தரபாண்டியன் பட இயக்குனர் என்பதால் ஓரளவிற்கு நம்பிக்கை உள்ளதாம். சரி நாம் விஷயத்திற்கு வருவோம் சசிகுமார் படத்தை சோலோவாக வெளியிட்டாலே ஓடுவது சிரமம் தான்.

அந்த வகையில் தற்போது பொங்கலுக்கு பெரிய படங்கள் எதுவும் போட்டி இல்லாததால் சசிகுமார் அவரின் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை களத்தில் இறக்கி விட முடிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். ஏனெனில் எப்படியும் ஊரடங்கு போட்டு தியேட்டரை இழுத்து மூடி விடுவார்கள். அதனால் படம் வெளியாகாது என்று நினைத்த படக்குழுவினர் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை சென்சாருக்கு அனுப்பவே இல்லையாம்.

ஒரு படம் சென்சார் செய்த பின்னரே தியேட்டரில் வெளியாக முடியும். ஆனால் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்னும் சென்சார் செய்யாமல் இருப்பதால் படம் வெளியாவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. இந்த அளவிற்கா படக்குழுவினர் மெத்தனமாக இருப்பது என பலர் அவர்களை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Trending News