வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் படம் துணிவு. இந்த படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது.

ஆகையால் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் இப்போதே படத்திற்கான வேலைகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இப்போது துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வினோத் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் பிசினஸ்.. சரண்டர் ஆன தயாரிப்பாளர், காற்றில் பறக்கும் தளபதியின் மானம்

அதாவது துணிவு படத்திற்காக கடந்த ஒரு வருடங்களாக அஜித் நீண்ட தாடி, காதில் கடுக்கன் என நியூ லுக்கில் இருந்தார். அவருடைய இந்த புதிய மாற்றம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இது பற்றி வினோத் கூறுகையில் சில புகைப்படங்களை பார்த்தே ரசிகர்கள் இவ்வாறு கொண்டாடும் நிலையில் துணிவு படத்திற்காக சில ப்ரோமோஷன்களை வெளியிட உள்ளோம்.

அதைப் பார்த்தால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று புரியவில்லை என வினோத் கூறியுள்ளார். ஏற்கனவே இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும் மங்காத்தா படத்தை போல இந்த படத்திலும் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

Also Read : ஜெட் வேகத்தில் எகிறிய வினோத்தின் மார்க்கெட்.. அஜித்தால் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்

இதில் ஒரு கதாநாயகனாக இல்லாமல் மோசமான கெட்டவனாக அஜித்தை காட்டப்பட்டுள்ளதாக வினோத் கூறியுள்ளார். மேலும் இதுவரை அஜித் பார்த்திடாத ஒரு வித்தியாசமான கோணத்தில் துணிவு படத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது வினோத் கொடுத்த இந்த அப்டேட்ட துணிவு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒரு புறம் விஜய் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படமாக வாரிசு படத்தில் நடித்துள்ளார். மறுபுறம் அதற்கு நேர் எதிரான ஆக்சன் நிறைந்த துணிவு படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Also Read : விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய ராஜமௌலி.. இந்தப் பாராட்டு அஜித்துக்கு மட்டும்தான்

Trending News