திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தோனி அண்ணாச்சி ஹேப்பி, இப்படியா அண்ட புளுகு புளுகுறது.? பட வாய்ப்புக்காக செய்யும் மட்டமான வேலை

Dhoni-LGM: கிரிக்கெட்டில் புகழின் உச்சத்தை அடைந்த தோனி தற்போது தன் கவனத்தை சினிமா பக்கம் திருப்பி உள்ளார். ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியுள்ள இவர் எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளார்.

ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படத்தின் ட்ரெய்லர், ப்ரமோஷன் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்போது இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

Also read: எல்ஜிஎம் படத்தின் முதல் நாள் வசூல்.. கல்லா கட்டினாரா தோனி

அது மட்டுமல்லாமல் வசூலும் மந்தமாக தான் இருக்கிறது. ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக தற்போது பட குழுவினர் எல்ஜிஎம் படத்திற்கு ஆதரவு கிடைத்து வருவதாகவும், இதனால் எங்கள் தயாரிப்பாளர் குஷியில் இருக்கிறார் என்றும் அடித்து விட்டுள்ளனர்.

உண்மையில் இப்படம் வெளியான அதே நாளில் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படமும் வெளியானது. அந்த வகையில் சந்தானம் தான் இப்போது வசூலில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்ஜிஎம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இருப்பினும் படத்திற்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளதாக ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரு பேட்டியில் செய்தி உள்ளார்.

Also read: LGM Movie Review- தோனி, ஹரிஷ் கல்யாண் கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா? எல்ஜிஎம் முழு விமர்சனம் இதோ!

அதாவது ஹரிஷ் கல்யாண், இவானா இருவரும் கோவை பிராட்வே திரையரங்கில் இன்று ரசிகர்களுடன் இப்படத்தை பார்த்தனர். படம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இவர்கள் இருவரும் இப்படம் தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அதேபோன்று படத்திற்கான வரவேற்பு அமோகமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என கூறினார்கள். இதை பார்த்த பலரும் பட வாய்ப்புக்காக வாய் கூசாமல் எப்படி இப்படி ஒரு பொய் சொல்ல முடிகிறது என அவர்களை விமர்சித்து வருகின்றனர்.

Also read: கருப்பு பணத்தை மாற்ற இப்படி எல்லாம் செய்யலாமா தல.. தோனியை கழுவி ஊற்றிய பயில்வான்

Trending News