செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கவினின் லிப்ட்டில் நம்பி ஏறலாமா.? ட்விட்டரில் வெளியான விமர்சனங்கள்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதனை படைத்த நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது நடிகர் கவினும் இணைந்துள்ளார். என்றுதான் கூறவேண்டும். முன்னதாக கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்னனு தெரியுமா படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது அதை ஈடுகட்டும் விதமாகவே லிப்ட் படம் வெளியாகி உள்ளது.

lift-review-1
lift-review-1

இயக்குனன் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் லிப்ட். திரையரங்குகள் திறந்திருந்தும் இப்படத்தை இன்று ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். ஒரு ஐடி கம்பெனியில் பல அடுக்கு மாடிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் தினமும் பயன்படுத்தும் லிப்டில் பேய் வந்தால் எப்படி இருக்கும்? என்பதை மிரட்டலாக கூறியுள்ள படம் தான் லிப்ட்.

lift-twitter-review
lift-twitter-review

படத்தின் முதல் பாதி முழுவதும் கவின் ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்கியுள்ளார். லிப்டில் மாட்டிக் கொள்ளும் போது அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களை அவரது முகத்தில் அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு இணையாக அம்ரிதாவும் நடிப்பில் அசத்தி உள்ளார். இப்படம் நிச்சயமாக கவினுக்கு நல்ல கம்பேக்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

lift-twitter-review
lift-twitter-review

சமீபத்தில் வெளியான பேய் படங்களுக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என்று தான் ட்விட்டரில் இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதுதவிர லிப்ட் படம் தியேட்டரில் வெளியாங வேண்டிய படம் அதை ஏன் ஓடிடியில் வெளியிட்டீர்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு படம் நன்றாக உள்ளதாம்.

lift-twitter-review
lift-twitter-review

இதேபோல் தொடர்ந்து கவின் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் நிச்சயம் அவரும் தமிழ் சினிமாவில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. ஒரு டீசன்ட்டான ஹாரர் படத்தை வழங்கியுள்ள கவின் அதை திரையரங்கில் வெளியிடாதது மட்டுமே ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. மற்றபடி படம் ரசிக்கும் விதமாகவே உள்ளது.

lift-twitter-review
lift-twitter-review

Trending News