வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கம் போல் திருமண நாளில் விஜயகாந்த் கொடுத்த போஸ்.. சத்ரியன் போல் வந்த கேப்டன்

சினிமாவிலும் அரசியலிலும் ஜாம்பவானாக திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். சமூக பிரச்சனை கொண்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் விருதகிரி. பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கினார். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் தற்பொழுது வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சிங்கப்பூர் வரை சென்று வந்த நிலையில் வீழ்சேரியில் மட்டுமே அமர்ந்த நிலையிலேயே அனைவரையும் சந்தித்து வருகிறார்.

Also Read: விஜய்க்கு முன்னாடி இளையதளபதி பட்டம் வைத்திருந்த ஹீரோ.. அடுத்த விஜயகாந்த் என பெயர் எடுத்த நடிகர்

இன்று கேப்டன் விஜயகாந்த் தனது திருமண நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும்  தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்பொழுது சிகிச்சையில் இருக்கும் இவர் வீல்சேரியில் அமர்ந்தபடி தனது 33 வது திருமண நாளை பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தனது இரு மகன்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி கூறி தனது மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

vijayakanth-family-photo

Also Read: போலீஸ் கதாபாத்திரத்தில் வெற்றிகண்ட 10 ஹீரோக்கள்.. சத்திரியனுக்கு சாவே இல்ல என மிரட்டிய விஜயகாந்த்

Trending News