விடாமுயற்சிக்கு போட்டியாக சாய் பல்லவியின் தண்டேல் படம் ஏழாம் தேதி ரிலீசாக உள்ளது. அமரன் படத்தைப் போல இதுவும் ஒரு உண்மை சம்பவத்தில் அடிப்படையாய் உருவாக்கப்பட்ட கதைதான். இந்த படத்திற்கும் கிட்டத்தட்ட 100 தியேட்டர்கள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்கள்.
நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் இந்த படம் தமிழிலும் வெளி வருகிறது. தெலுங்கில் பிரேமம், கார்த்திகேயா 2 போன்ற வெற்றி படங்களை இயக்கிய சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திலும் போராடும் ஒரு பெண்ணாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
படத்தின் கதை படி சாய் பல்லவியின் கணவர் நாக சைதன்யா ஒரு மீனவர். தொழில் நிமித்தமாக கடலில் சென்று கொண்டிருக்கும் போது தவறுதலாக பாகிஸ்தான் பார்டர் பக்கம் சென்று, அந்நாட்டு ராணுவத்திடம் மாட்டிக்கொள்கிறார். அவரை அங்கிருந்து எப்படி சாய் பல்லவி மீட்டு வருகிறார் என்பதுதான் கதை.
ஏற்கனவே தமிழில் வெளிவந்த படங்களாகிய ரோஜா, க/ பெ ரண சிங்கம் போன்ற கதைகளை ஞாபகப்படுத்தினாலும் சாய்பல்லவி மற்றும் இயக்குனர் சந்து மொண்டேட்டி இந்த படத்தை வேற லெவல் பண்ணி இருக்கிறார்களாம். எப்பொழுதுமே தனது கதாபாத்திரத்தில் ஸ்கோர் பண்ணும் சாய் பல்லவி இதிலிலும் அசத்தியிருக்கிறாராம்.
இந்தக் படத்தின் கதையும் உண்மை சம்பவம் தான் அந்த காலகட்டத்தில் மாட்டிக்கொண்டவரை மீட்டெடுத்த வெளி உறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் தற்போது இல்லை. அதனால் அவரிடம் பல சுவாரசியமான விஷயங்களை கேட்க வழி இல்லாமல் அவரது மகளிடம் கேட்டு இயக்கியுள்ளார் சந்து மொண்டேட்டி.